»   »  சர்ச்சையான 'நாகூர் பிரியாணி' சித்தார்த் கொடுத்த "சிறப்பான" விளக்கம்!

சர்ச்சையான 'நாகூர் பிரியாணி' சித்தார்த் கொடுத்த "சிறப்பான" விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் தான் பதிவு செய்த சர்ச்சையான ட்வீட்டிற்கு என்னுடைய படத்தின் வசனத்தை தான் நான் பதிவிட்டேன் யாரையும் குறிப்பிடவில்லை என்று நடிகர் சித்தார்த் விளக்கமளித்திருக்கிறார்.

சித்தார்த் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் ஜில் ஜங் ஜக் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படம் குறித்து நடிகர் சித்தார்த் பேசினார்.

Actor Siddharth Explain about his Controversy Tweet

இந்த விழாவில் நடிகர் சித்தார்த் சமீபத்தில் பதிவிட்ட "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டைல இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ணு எழுதி இருந்தா அத யாராலயும் மாத்தமுடியாது".

என்ற பதிவிற்கு பத்திரிக்கையாளர்கள் விளக்கம் கேட்டனர். அதற்கு தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் வரும் வசனம் அது. நான் யாரையும் குறிப்பிட்டு டுவிட் செய்யவில்லை.

எனது ட்விட்டர் பக்கத்தில் நான் நடித்த படத்தின் வசனத்தை எழுதினேன். மற்றவர்கள் வேறு விதத்தில் நினைத்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும்' என சித்தார்த் விளக்கமளித்தார்.

இந்த ட்வீட் வெளியான சமயம் முன்னணி நடிகர்களைத் தான் அவர் குறிப்பிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் அதனைப் பற்றி காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பின் சித்தார்த் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இவரது நடிப்பில் நாயகிகளே இல்லாமல் உருவாகியிருக்கும் ஜில் ஜங் ஜக் திரைப்படம் வருகின்ற 12 ம் தேதி வெளியாகிறது.

English summary
Actor Siddharth Registered on its Twitter page to a Philosophy, Now he Explained "I am not Mentioning Anybody".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos