»   »  ஓடியோடி உதவும் ராசாக்களா, நீங்கள் டெட்டனஸ் ஊசி போட்டுக்கங்கப்பா: சித்தார்த் அறிவுரை

ஓடியோடி உதவும் ராசாக்களா, நீங்கள் டெட்டனஸ் ஊசி போட்டுக்கங்கப்பா: சித்தார்த் அறிவுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் டெட்டனஸ் ஊசி போட்டுக் கொள்ளுமாறு நடிகர் சித்தார்த் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவி வருகிறார்கள். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதுடன் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்டும் உள்ளனர்.

இந்நிலையில் சித்தார்த் தன்னார்வலர்களுக்கு ஓர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெட்டனஸ்

தன்னார்வலர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். டெட்டனஸ் ஊசி போட்டுக் கொள்ளுங்கள். திறந்தநிலையில் உள்ள காயங்கள் இருந்தால் கவனம். தோல் நோய் பரவும். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அவசரம்

அவசரம். அனைத்து பகுதிகளிலும் பெண்களின் உள்ளாடைகள் கேட்கிறார்கள். சானிடரி நாப்கின்கள் கிடைக்கிறது. தயவு செய்து பல்க்காக உள்ளாடைகளை நன்கொடையாக அளிக்கவும்.

பெட்ஷீட்கள்

உணவு முக்கியம் அல்ல. வெள்ளநீர் வடிந்து கொண்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. பெட்ஷீட்கள், மெழுகுவர்த்திகள், பூச்சிக்கொல்லிகள், தண்ணீரை நன்கொடை அளியுங்கள். #chennaimicro

ஏஜிஎஸ்

ஏஜிஎஸ் ஸ்டாக் மையம் நிரம்பிவிட்டது. அதனால் நிவாரணப் பொருட்கள் தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி, தாம்பரம் கிறிஸ்டியன் கிங் பள்ளி அல்லது பிக் எப்.எம். அலுவலகத்தில் அளிக்கவும்.

English summary
Actor Siddharth tweeted that, 'Please spread the word. Volunteers need to protect themselves. Tetanus shot. Careful of open wounds. Skin diseases are common. Be safe.'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil