ஜெய் பீம்... கலைப் படைப்பை அச்சுறுத்துவது கோழைத்தனம்... சூர்யாவுக்கு பிரபல நடிகர் ஆதரவு!

சென்னை: ஜெய் பீம் படத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Recommended Video

Suriya -வின் ஜெய்பீம் பட சர்ச்சை, ஆதரவு கொடுக்கும் பிரபலம் | JaiBhim, PA.Ranjith, PC Sreeram

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ஜெய் பீம். டிஜெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் சமீபத்தில் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இருளர் இன மக்கள் காவல்துறையின் அத்துமீறலால் சந்திக்கும் அவலங்களை சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடும் விமர்சனங்கள்

கடும் விமர்சனங்கள்

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் வன்னியர் சமூகத்தின் சின்னம் படத்தில் தவறாக காட்டப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு

சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா வெளியில் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீசார் அவருடன் செல்வார்கள்.

சூர்யாவுக்கு ரசிகர்கள் ஆதரவு

சூர்யாவுக்கு ரசிகர்கள் ஆதரவு

நடிகர் சூர்யா போலீசாரிடம் எந்த கோரிக்கையும் முன் வைக்காத நிலையில் உளவுத்துறையின் ரகசிய தகவலின்படி அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு வலுக்கும் எதிர்ப்பை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #weStandwithSurya என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் சித்தார்த் ஆதரவு

நடிகர் சித்தார்த் ஆதரவு

சினிமா பிரபலங்களும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சித்தார்த்தும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, " நாங்கள் கமல்ஹாசனுடன் நின்றோம், விஜய்யுடன் நின்றோம், சூர்யாவுடன் நிற்கிறோம்.

அச்சுறுத்துவது கோழைத்தனம்

அச்சுறுத்துவது கோழைத்தனம்

கருத்து வேறுபாடுகள் அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு கலைஞரை அச்சுறுத்துவது அல்லது கலைப் படைப்பை அச்சுறுத்துவது கோழைத்தனம் என்று நம்பும் எவரையும் இந்த "நாங்கள்" குறிக்கிறது." ஜெய்பீம் படக்குழுவினருடன் நான் நிற்கிறேன்... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X