»   »  'இது நமக்கு அவமானம்..' - நடிகர் சித்தார்த் ட்வீட்!

'இது நமக்கு அவமானம்..' - நடிகர் சித்தார்த் ட்வீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஏர்போர்ட்டில் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டிய இயக்குனர்கள்- வீடியோ

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இன்று சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மோடியே திரும்பிப்போ #GoBackModi எனும் ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. கறுப்பு பலூன்களை வானில் பறக்கவிடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Actor Siddharth tweets on cauvery issue

நேற்று முன் தினம் நடைபெற்றபோது போராட்டங்கள் வெடித்ததால் போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றியமைக்கப்பட்டன. இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஐபிஎல் சிஎஸ்கே ஆட்டங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்.

இதே போல போராட்டம் நடத்தி டாஸ்மாக்கை மூட முடியுமா, எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களையும் மூட முடியுமா, போராட்டங்களில் கட்சி கொடியை நீக்கமுடியுமா, தமிழ்நாட்டில் பல வருந்தத்தக்க விஷயங்கள் நடைபெறுகின்றன. மக்கள் எல்லாவற்றுக்கும் போராடுவார்களா?" என சரமாரி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார் சித்தார்த். "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாம் அனைவரும் வலியுறுத்துகிறோம். இதில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். தமிழகம் ஒரே கூட்டமாக ஒரே நோக்கத்திற்காக போராடுகிறோம். தமிழர்களே தமிழர்களை தமிழர்கள் அல்ல என்று சொல்வது ஒரு அவமானம். இந்தியர்கள் இந்தியர்களை ஆன்ட்டி இந்தியன்ஸ் என்று சொல்வது போல" எனக் குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்.

English summary
Actor Siddharth tweets on Cauvery issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X