Simbu Net worth: சிம்புவுக்கு 40 வயசாகிடுச்சு.. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: நடிகர் சிலம்பரசன் டி. ராஜேந்தர் இன்று தனது 40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் மகனாக பிறந்த சிம்பு அப்பாவின் இயக்கத்தில் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார்.
நடிகர், பாடகர், சிறந்த நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்ப்போம்..

சிம்புவுக்கு 40 வயசாகிடுச்சு
நடிகர் சிம்பு இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிம்புவின் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிம்புவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து சிம்புவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தின் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. 40 வயதை தொட்ட நிலையில், சிம்புவுக்கு இந்த ஆண்டாவது திருமணம் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அறிமுகப்படுத்திய அப்பா
1984ம் ஆண்டே உறவைக் காத்த கிளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு. மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், மோனிஷா என் மோனாலிஷா என ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் சிம்பு. அப்பா டி. ராஜேந்தர் இயக்குநரும் நடிகருமாக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நிலையில், தனது வாரிசை சினிமாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய நடிகராக மாற்றினார்.

சகலகலா வல்லவன்
நடிப்பு மட்டுமின்றி இசை மீதும் இயக்கத்தின் மீதும் நடிகர் சிம்புவுக்கு அளவு கடந்த ஆர்வமும் திறமையும் இருந்தது. சினிமாவில் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது, மன்மதன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தது என தமிழ் சினிமாவின் லேட்டஸ் சகலகலா வல்லவனாகவே வல்லவன் சிம்பு மாறினார். இன்றளவும் புதிய முயற்சிகளை சினிமாவில் செய்து சாதித்து வருகிறார்.

காதலும் பிரேக்கப்பும்
நடிகர் சிம்பு 40 வயது வரை இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். ஆனால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுடன் சிம்புவுக்கு காதல் ஏற்பட்டதும், பின்னர் பிரேக்கப்பில் முடிந்ததும் சிம்பு ரசிகர்களை ரொம்பவே வருத்தமடைய செய்தது. வல்லவன் படத்தில் நடித்த போது நடிகை நயன்தாரா மற்றும் சிம்பு காதலித்தனர். வாலு படத்தின் போது நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலித்தனர். கொரோனா லாக்டவுன் நேரத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்த நடிகை நிதி அகர்வாலை சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்திகள் பரவின.

20 கோடி சம்பளம்
காதல் அழிவதில்லை படத்தில் மூலம் அறிமுகமான நடிகர் சிம்பு தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, AAA, செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு என அதிரடியான படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீப காலமாக, அதிகபட்சமாக சிம்பு புதிய படங்களுக்கு 20 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து மதிப்பு
பிறந்தது முதல் தற்போது வரை சினிமாவிலேயே மூழ்கி உள்ள நடிகர் சிம்புவுக்கு தனியாகவே 119 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியாக உள்ளது. சொகுசு கார், பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் சிம்புவின் பெயரிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











