»   »  தம்பிக்குப் பேசாம கல்யாணம் செஞ்சு வச்சிருங்க.. சிம்பு குடும்பத்துக்கு ஜோசியர் அட்வைஸ்!

தம்பிக்குப் பேசாம கல்யாணம் செஞ்சு வச்சிருங்க.. சிம்பு குடும்பத்துக்கு ஜோசியர் அட்வைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் செய்துவைத்தால் சிம்புவின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று குடும்ப ஜோதிடர் கூறியதால் தற்போது சிம்புவின் குடும்பமே அவருக்கு தீவிரமாக பெண் தேடி வருகின்றனராம்.

பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு தற்போது மிகவும் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவர் நடித்து வரும் படங்களும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன.

Actor Simbu Enters Wedlock

தற்போது பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் வருகின்ற 19 ம் தேதி சிம்புவை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் சிம்புவிற்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதால், நாளுக்குநாள் சிம்புவின் மீதான பிடி இறுகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சிம்புவின் குடும்ப ஜோதிடர் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் தொழில் மற்றும் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று கூறியிருக்கிறாராம்.

இதுநாள்வரை தனது திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சிம்பு தற்போது தான் சந்தித்து வரும் பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாராம்.

இதைத் தொடர்ந்து சிம்புவிற்கு அவரது குடும்பத்தினர் தற்போது தீவிரமாக பெண் தேடி வருகின்றனராம். ஏற்கனவே நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரைக் காதலித்து அந்த 2 காதல்களும் சிம்புவிற்கு முறிந்து போனது குறிப்பிடத்தக்கது.

English summary
Simbu Family Astrologer said " Simbu enter Married life his all Problems Reducing Step by Step". now Simbu Agreed his Marriage Life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil