For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காதலித்து ஏமாற்றிய பெண்கள்..கொலை செய்ய துடிக்கும் இளைஞர்கள்.. தேவதாஸ் பிரதர்ஸ் டீசர்!

  |

  சென்னை : நடிகர் சிம்பு தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரைலரை வெளியிட்டார். சமீபகாலமாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக கலந்து கொள்ளாத சிம்பு இப்போது இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்

  தேவதாஸ்னா தண்ணிய போட்டுட்டு தம்மு அடிச்சிட்டு உண்மை காதல்னு உயிர கொடுப்போம்னு நினைச்சிட்டாங்களா. அவளுங்கள நாம சாவ அடிக்கணும் என கொலை வெறியில் நகரும் கதை.

  இப்போதுள்ள நவீன காதலை பிரதிபலிக்குமாறு வெளியாகி இருக்கும் இந்த டீசர் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை ஈர்த்துள்ளது.

  வேற வழியே இல்லை..பிரபல ஹீரோக்கள் சம்பளத்தை குறைச்சே ஆகணும்..சினிமா தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு!

  டெரர் வசனங்கள்

  டெரர் வசனங்கள்

  காதலித்த பெண்களை துன்புறுத்தி கொலை செய்யும் நான்கு இளைஞர்கள், இவங்கள ஏதாவது செய்யணும் பிரதர், நம்மள நினைச்சி அவளுங்க ஒவ்வொரு செகண்டும் வாழ்நாள் முழுதும் அழணும் போன்ற டெரர்ரான வசனங்களுடன் ஆரம்பிக்கிறது தேவதாஸ் பிரதர்ஸ் ட்ரெய்லர்.

  டபுள் மீனிங் வசனங்கள்

  டபுள் மீனிங் வசனங்கள்

  டீசர் தொடங்கும் போது கொஞ்சம் சீரியஸான கதை போன்று தெரியும் நமக்கு. பின் சிறிது நேரத்தில் அப்படியே உல்டாவாக மாறிவிடும். இப்போதிருக்கும் இளைஞர்களின் காதலை மையமாக வைத்து டபுள் மீனிங் வசனங்கள், ஹீரோயின்களின் கவர்ச்சி, ஓயோவில் ரூம் என நவீனக்காதலர்கள் காதல் என்ற பெயரில் எப்படியெல்லாம் எல்லையை மீறி காதல் செய்கிறார்களோ அது அத்தனையும் இந்த படத்தில் காட்டி இருப்பார்கள்.

  நான்கு பிரச்சினைகள்

  நான்கு பிரச்சினைகள்

  4 ஆண்கள் மற்றும் 4 பெண்களின் காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த தேவதாஸ் பிரதர்ஸ் பட டிரைலரின் மூலம் நமக்கு தெரியவருகிறது. அந்த நான்கு காதல் ஒவ்வொரு காதலிலும் இருக்கும் பிரச்சனைகளையும் அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டுள்ளது.

  லவ் ரிவெஞ்

  லவ் ரிவெஞ்

  நான்கு பேரின் காதல் வாழ்க்கையும் சந்தோசமாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு சில காரணங்களுக்காக ஒவ்வொருவரின் காதலிகளும் தங்களது காதலர்களை பிரிந்து செல்கிறார்கள். பிரிந்து சென்ற காதலிகளை காதலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதை இவர்கள் இந்த டிரைலர் மூலம் சொல்ல வரும் கதை..

  அல்டாப்பு பெண்கள்

  அல்டாப்பு பெண்கள்

  மயில்சாமி வந்தவுடனேயே ட்ரெய்லர் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது ஆண்கள் அனைவரும் அப்பாவி போல் இருக்க, பெண்கள் அனைவரும் தங்களுக்கு இங்கிலீஷில் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் அள்ளி தெளிக்கின்றனர். இந்தப் படம் கண்டிப்பாக ‘ ஏ சர்டிபிகேட்‘ வாங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

  பல நடிகர்கள்

  பல நடிகர்கள்

  இதில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் மற்றும் சஞ்சிதா செட்டி, காமெடி நடிகர் பால சரவணன், மயில்சாமி, மெட்ராஸ் ஜானி போன்றோருடன் ஓரிரு படங்களில் நாம் பார்த்த முகங்கள் சிலர் என மொத்தம் நான்கு ஜோடிகள் நான்கும் வேறு வேறு விதமான கதைகளைக் கொண்டு தேவதாஸ் பிரதர்ஸ் உருவாகியுள்ளது.

  டிரைலர் வெளியீடு

  டிரைலர் வெளியீடு

  இப்படி இந்த படத்தில் பல தெரிந்த முகங்களும் சில தெரியாத முகங்களும் நடித்துள்ள இந்த நவீன காதல் காவியமான தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரைலரை தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் என்று அழைக்கப்படும் சிம்பு அவர்களை வைத்து வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக வெளியாகி இருப்பின் எந்த அளவுக்கு இந்த டீசர் ஆதரவு பெற்றிருக்குமோ அதவிட பலமடங்கு இப்பொழுது சிம்புவினால் பலராலும் அறியப்பட்டு இந்த படத்தின் டீசர் இப்போது பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், காமம், சண்டை, வெறுப்பு, கோபம், காதல் முறிவு என இப்போதுள்ள காதலர்களுக்கு உரித்தான அனைத்திலும் புதுமை கலந்த, இப்போது காலக்கட்டத்தில் நடக்கக்கூடிய ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் கே. ஜானகிராமன்,

  English summary
  Actor Simbu has released the trailer of Devadas Brothers
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X