காட்டுப் பசியில் இருக்கும் சிம்பு.. பசியை தணிக்க யாருமில்லை என வருத்தம்!

சென்னை : நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்த சிறப்பான படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்றைய தினம் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் சிறப்பான வெற்றிக்கான அடித்தளத்தை போட்டுள்ளது.

படம் சிறப்பான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாகவே இவர் திரைத்துறைக்கு தன்னுடைய தந்தை டி ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து நாயகனாக தன்னுடைய நடிப்புக்கு தீன போடும் கேரக்டர்களில் இவர் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.

மன்மதன் படம்

மன்மதன் படம்

இவருடைய வெற்றிப் படங்களுக்கு இடையில் மன்மதன் படத்தை கொடுத்தார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார் ஜோதிகா. த்ரில்லர் கதையாக வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்கள் மற்றும் வசூலை குவித்தது. இந்தப் படம் சிம்புவின் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது..

சிறப்பான கதைக்களங்கள்

சிறப்பான கதைக்களங்கள்

ஆனால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் சிம்பு அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். இவரது காதல் மற்றும் ஆக்ஷன் படங்கள் இவரை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக மாற்றியுள்ளன. தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகராக சிம்பு உள்ளார்.

சிறப்பான கதைத் தேர்வு

சிறப்பான கதைத் தேர்வு

இவரது படங்கள் அதிகமாக ரிலீசாகிறதோ இல்லையோ, சர்ச்சைகள் அதிகமாக வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் இவரை விட்டுக் கொடுக்காமல் இவரது ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பிலும் அணுகுமுறையிலும் அதிக மெர்ச்சூரிட்டி காணப்படுகிறது. கதைத் தேர்விலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மாநாடு படம்

மாநாடு படம்

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சிம்புவின் மாநாடு படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், நேற்றைய தினம் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படமும் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படமும் அதிகமான வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காட்டுப்பசியில் சிம்பு

காட்டுப்பசியில் சிம்பு

இதனிடையே சிம்பு தற்போது கொடுத்துள்ள பேட்டியில் தான் மிகுந்த காட்டுப்பசியில் உள்ளதாகவும் ஆனால் அந்தப் பசியை தணிக்கும் வகையில் தனக்கு படங்கள் அமையவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மனநிலை தனக்கு முன்னதாகவே இருந்ததாகவும் அப்போதுதான் தான் மன்மதன் படத்தை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

படம் இயக்குகிறாரா சிம்பு?

படம் இயக்குகிறாரா சிம்பு?

அடுத்ததாக சிம்பு நடிக்கவுள்ள படங்கள் குறித்த கேள்விக்குத்தான் சிம்பு இப்படி பதிலளித்துள்ளார். மேலும் தன்னுடைய பசியை தணிக்கும் வகையிலான கதைகளை தான் தேட வேண்டியிருக்கும் அல்லது ஒரு படத்தை தானே இயக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X