twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜல புல ஜங்கு,பிம்பிலாக்கி பிலாப்பி போன்ற வரிகளுக்கான விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்

    |

    சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் திரைத் துறைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    இந்நிலையில் வரும் தீபாவளியன்று அவர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் வெளியாகிறது.

    இந்தப் படம் குறித்து பல்வேறு சுவாரசியமான விசயங்களை சிவ கார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    நரம்பு புடைக்க சிக்ஸ் பேக்குடன் மிரட்டும்.. வலிமை வில்லன் கார்த்திகேயன்.. உச்சு கொட்டும் ரசிகர்கள் !நரம்பு புடைக்க சிக்ஸ் பேக்குடன் மிரட்டும்.. வலிமை வில்லன் கார்த்திகேயன்.. உச்சு கொட்டும் ரசிகர்கள் !

    வெற்றிக் கூட்டணி

    வெற்றிக் கூட்டணி

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணியான சிவகார்த்திகேயன் மற்றும் சத்யராஜ் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு படத்தை புரமோட் செய்யும் வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். இப்போது நடந்த விழாவிலும் கூட நடிகர் சத்யராஜ் சிவகார்த்திகேயனுக்கு அன்பளிப்பு கொடுக்க விரும்புகிறேன் என்று கூறி மேடையில் அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.

    தமிழ் தெலுங்கு

    தமிழ் தெலுங்கு

    சொல்லி வைத்தது போல் சமீபத்தில் சில முன்னணி நடிகர்கள் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் அல்லது தெலுங்கு இயக்குநருடன் சேர்ந்து பணிபுரிவதற்கு குறிப்பாக ஏதாவது காரணம் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, லாக்டோன் நேரத்தில் ஓடிடியில் நிறைய படங்கள் பார்த்தபோது நகைச்சுவை திரைப்படங்கள் மிகக் குறைவாக இருந்தது. நாமும் நகைச்சுவை திரைப்படங்கள் செய்வோமே ஏன் ஒரு படத்தை இப்போது செய்யக்கூடாது என்று யோசித்தபோது பிரின்ஸ் கதையை இயக்குநர் என்னிடம் கூறினார்.

    தீபாவளி ஸ்பெஷல்

    தீபாவளி ஸ்பெஷல்

    ஏற்கனவே அந்த இயக்குநர் தெலுங்கில் எடுத்த படம் மிகப் பெரிய ஹிட்டாகியிருந்ததால் இரண்டு மொழிகளிலிருந்து சேர்ந்து பணியாற்றும்போது அது நிறைய மக்களிடம் போய் சென்றடையும். அந்தக் காரணத்திற்காகத்தான் நான் பிரின்ஸ் படத்தில் நடித்தேன் என்றும், முன்பெல்லாம் தீபாவளியன்று வெளியாகும் படங்களை காத்திருந்து பார்ப்போம், இப்போது என் படமே தீபாவளிக்கு வருவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது என சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

    ஜல புல ஜிங்கு

    ஜல புல ஜிங்கு

    உங்கள் பாடல்களில் வித்தியாசமான சொற்கள் பயன்படுத்துகிறீர்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஜல புல ஜங்கு, பிம்பிலாக்கி பிலாப்பி இதுபோன்ற சொற்களுக்கு பொருள் என்ன என்ற கேள்விக்கு, இந்தச் சொற்களுக்கு பொருளே கிடையாது. நீங்களே ஏதாவது நினைத்துக் கொள்ளலாம். வெறும் ஓசைக்காக மட்டுமே அப்படிப்பட்ட சொற்களை பாடலாசிரியர்கள் அல்லது இசையமைப்பாளர்கள் கண்டுபிடிப்பார்கள். ஜல புல ஜங்கு வரியை ரோகேஷ் எழுதினார். பிம்பிலாக்கி பிலாப்பி இசையமைப்பாளர் தமன் சேர்த்தார். தத்தகாரத்தில் பாடுவதை விட இப்படி பாடிக்காட்டினால் இன்னும் ஈர்ப்புடன் இருக்கும் என்பதற்காக இசையமைப்பாளர்கள் அப்படி செய்வார்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

    English summary
    It has been 10 years since actor Siva Karthikeyan entered the film industry. Meanwhile, his Tamil and Telugu film Prince is releasing on Diwali. Siva Karthikeyan has told various interesting things about this film in an interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X