சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷம்... வாழ்த்து சொன்ன சூரி !

சென்னை : சிவகார்த்தியேன் மற்றும் ஆர்த்தி தம்பதியர் தங்களது 11வது திருமண நாளை குட்டி பாப்பா குகன்தாஸுடன் விமர்சையாக கொண்டாடினார்கள்.

இணையத்தில் அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

11வது திருமண நாளை கொண்டாடும் இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலர் இணையத்தில் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

மனம்கவர்ந்த

மனம்கவர்ந்த

தமிழ் சினிமாவில் மிகவும் எளிமையான குடும்ப பின்னணியிலிருந்து வந்து சாதித்து காட்டிய வெற்றியாளர்கள் மீது ரசிகர்களுக்கு கூடுதலான அன்பும் மதிப்பும் இருக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனங்களை வென்றவர் சிவகார்த்திகேயன். இன்ஜினியர் மாணவரான சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரஜினி, கமல்அனைவரின் குரலிலும் பேசி அசத்தினர்.

தொகுப்பாளராக

தொகுப்பாளராக

போட்டியாளராக பங்கேற்ற விஜய் தொலைக்காட்சியிலேயே தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். இயல்பாக பேசி சிரிக்க வைத்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து மக்களால் நேசிக்கப்படும் நடிகரானார்.

மெரினா ஹீரோவாக

மெரினா ஹீரோவாக

தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படத்தை அடுத்து, இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் கதாநாயகனான நடித்தார். இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றுத்தந்தது.

எதிர்நீச்சல் திருப்புமுனை

எதிர்நீச்சல் திருப்புமுனை

சிவகார்த்தியேனுக்கு திரும்புமுனையை ஏற்படுத்தி திரைப்படம் எதிர் நீச்சல். இப்படத்தின் கதையும் பாட்டும் மிகவும் ரசிக்கும் படி இருந்து இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. அடுத்ததாக மான் கராத்தே இந்த படம் வசூலை வாரிக்குவித்தது. இந்த திரைப்படத்தை அடுத்து மான் கராத்தே போஸ் பிரபலமானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமாகவும் இப்படம் இருந்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ரொமோ, வேலைக்காரன், கனா பல வெற்றிப்படங்களை கொடுத்தார். மேலும், நம்ம வீட்டுப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து அண்ணன் தங்கை பாசத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த படம்.

டாக்டர் சன்டிவியில்

டாக்டர் சன்டிவியில்

இயக்குனர் ஆர் ரவிகுமாரின் அயலான் படத்திலும், அதே போல சிபி சக்ரவர்த்தி என்ற புது இயக்குனர் இயக்கிய டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் செப்டம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 4ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இரண்டாவதாக ஆண்குழந்தை

இரண்டாவதாக ஆண்குழந்தை

சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு மகன் பிறந்திருப்பது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்திருந்தார். தனது அன்புமகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டி உள்ளார்.

11வது திருமண நாள்

11வது திருமண நாள்

இந்நிலையில், சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியின் தங்களது 11வது பிறந்த நாளை இன்று கொண்டாடியினர். இணையத்தில் இவர்களின் திருமண நாள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 11வது திருமணநாளை கொண்டாடும் தம்பதிக்கு பலரும் இணையத்தின் வாயிலாக வாழ்த்துக்களை கூறினர்.

சூரி வாழ்த்து

சூரி வாழ்த்து

இதேபோல இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூரி, தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பு தம்பி Siva_Kartikeyan மற்றும் ஆர்த்தி தங்கைக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X