Don't Miss!
- Automobiles
நீங்க வச்சிருக்க ஆக்டிவாலாம் வேஸ்ட்! கார்களுக்கே உரித்தான அம்சத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஆக்டிவா!
- News
தமிழ்நாடு முழுவதும் ஜன.26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள்! விவாதிக்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு!
- Finance
நல்லநேரம், சுந்தர் பிச்சை இவர் பேச்சை கேட்கல.. Google ஊழியர்கள் தப்பிச்சாங்க..!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய.. மொறுமொறுப்பான ஸ்டப்டு பனானா
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Technology
Washing Machine இருக்கிறதா? அப்போ இந்த 7 தவறுகளை செய்யாதீங்க.! ஏனெனில்?
- Sports
கோலியை சிக்க நினைத்த இஷான் கிஷன்.. கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு.. தொடர்ந்து வீணாகும் வாய்ப்பு
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
இன்னும் இரு மாதங்களில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்.. விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மாவீரன் இந்த படம் டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிறப்பான வகையில் உருவாகி வருகிறது.
இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கி வருகிறார். படத்தின் இறுதி கட்ட சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் அனௌன்ஸ்மென்ட் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் தன்னுடைய போர்ஷனை சிவகார்த்திகேயன் முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
அந்த ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரை தட்டித் தூக்கிய சிவகார்த்திகேயன்.. மாவீரன் படத்தில் சம்பவம் இருக்கு!

நடிகர் சிவகார்த்திகேயன்
டாக்டர், டான் போன்ற வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். இந்த இரு படங்களும் 100 கோடி கிளப்பில் நுழைந்தது. இந்த படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் இந்த வெற்றியை சாத்தியமாக்கினார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளராகவும் இந்தப் படங்கள் அவருக்கு கைகொடுத்தது.

பிரின்ஸ் படம்
இதையடுத்து சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டமாக இவரது நடிப்பில் பிரின்ஸ் படம் வெளியானது. இந்தப் படம் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் இருந்தபோதிலும் நல்ல கதைக்களத்துடன் களமிறங்காத இந்தப் படம் சொதப்பியது.

ரசிகர்களை கவர்ந்த அறிவிப்பு வீடியோ
இதையடுத்து உடனடியாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய அவசியத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். தற்போது அவரது நடிப்பில் மாவீரன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவருக்கு அதிதி ஷங்கர் ஜோடியாகியுள்ளார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். முன்னதாக படத்தின் அனௌன்ஸ்மென்ட் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விரைவில் ரிலீஸ்
இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய போர்ஷனை சிவகார்த்திகேயன் நடித்து முடித்து விட்டாராம். இதையடுத்து படத்தை விரைவிலேயே ரிலீஸ் செய்ய சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் படத்தை ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டுள்ளாராம்.

விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்
தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். விஜய், அஜித் இவர்களுக்கு பிறகு இவரது மார்க்கெட் வேல்யூ மிகவும் அதிகமாக காணப்படுகிறது. மாவீரன் படத்தின் பிரீ ரிலீஸ் வசூல் 60 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகமான பிரீ ரிலீஸ் பிசினஸ்
இந்தப் படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் கைப்பற்றியுள்ளது. சாட்டிலைட் ரைட்சை சன் டிவி வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிகமான பிரீ ரிலீஸ் பிசினஸை செய்துள்ள படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.