twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா-கார்த்தி முன் தேம்பி அழுத சிவகுமார்… மேடையில் உருக்கமான சம்பவம் !

    |

    சென்னை : உழவன் பவுண்டேஷன் விழாவில், நடிகர் சிவக்குமார் தேம்பி தேம்பி அழுதபடி பேசினார்.

    40 ஆண்டுகளாக திரைப்படத்துறையிலும், நாடகம் மற்றும் சொற்பொழிவு மேடையிலும் பங்கேற்று ஒரு உதாரணக் கலைஞராக திகழ்ந்து வருகிறார் சிவக்குமார்.

    அகரம்

    அகரம்

    சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக 'அகரம்' என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் படித்த பலர் மருத்துவராகவும், பொறியாளராகவும் முக்கிய இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    உழவர் பவுண்டேஷன்

    உழவர் பவுண்டேஷன்

    அதேபோல, சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி உழவர் பவுண்டேஷனில் நிறுவனராக உள்ளார். இந்த பவுண்டேஷனின் வேளாண் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், வெற்றிமாறன், கார்த்திக் ,சூர்யா, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கண்கலங்கிய சிவக்குமார்

    கண்கலங்கிய சிவக்குமார்

    இந்த விழாவில் பேசிய சிவக்குமார், உழவர் பவுண்டேஷன் தொடங்கிய கார்த்தி கூட ஏழை விவசாயியின் பேரன்தான். நான் பிறந்த 10 மாதத்திலேயே என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மாதான் காட்டிலும், மேட்டிலும் தனி ஆளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார். ஒரு நடிகராக இந்த இடத்தில் இன்று நான் நிற்க எனது தாயின் கடுமையான உழைப்புதான் காரணம் என்று தேம்பி தேம்பி அழுதபடி பேசினார்.

    பெண்கள் தான் கடவுள்

    பெண்கள் தான் கடவுள்

    கடவுளை யாரும் பார்க்கவில்லை. பெண்கள் தான் கடவுள் என்று மிகவும் மனம் உருகி பேசினார். தந்தை கண்கலங்கி பேசியதைப் பார்த்த சூர்யா மற்றும் கார்த்தி கண்கலங்கி விட்டனர். பின்னர், அவரை அவர்கள் இருவரும் தேற்றினார்கள்.

    English summary
    Actor sivakumar cry at uzhavan foundation function
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X