தீபாவளி ரேஸில் சொல்லி அடித்த சர்தார்... கார்த்தி, பிஎஸ் மித்ரன் சந்தித்த முக்கியமான பிரபலம்
சென்னை: கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் மோதிய சர்தார், முதல் 5 நாட்களில் 50 கோடி வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.
இந்நிலையில், சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன், தயாரிப்பாளார் மூவரும் முக்கியமான பிரபலத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சொல்லி அடித்த சர்தார்
நடிகர் கார்த்திக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் எனக் கூறலாம். இந்த வருடத்தில் கார்த்தியின் முதல் படமாக விருமன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி ரிலீஸான 'பொன்னியின் செல்வன்' ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக நடித்து ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது தீபாவளி ஸ்பெஷலாகவ் வெளியாகியுள்ள சர்தாரும் கார்த்தியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

50 கோடி வசூல்
தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் 21ம் தேதி திரையரங்குகளில் சர்தார் வெளியானது. இந்தப் படத்துடன் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் மோதியது. முதல் நாளில் பிரின்ஸ் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தாலும், அடுத்தடுத்த நாட்களில் கார்த்தியின் சர்தார் சொல்லி அடித்தது. பிரின்ஸ் படத்துக்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, சர்தாருக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், முதல் 5 நாட்களில் 50 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது சர்தார். விருமன், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து சர்தாரும் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளது.

சர்தார் டீமுக்கு வாழ்த்து
இந்நிலையில், சர்தார் படத்தை கார்த்தியின் தந்தையும் நடிகருமான சிவகுமார் இன்று பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன், தயாரிப்பாளர் மூவரையும் வாழ்த்திய சிவகுமார், படம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். கார்த்தி ரா அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில், சிவகுமார் நேரில் சென்று சர்தார் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளி விடுமுறை முடிந்த பின்னரும் கூட சர்தார் படத்தின் ஆன்லைன் புக்கிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகும் என கார்த்தி, பிஎஸ் மித்ரன் இருவரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் சூட்டிங்
சர்தார் படத்தின் வசூல் இன்னும் குறையாத நிலையில், இந்த வார இறுதிக்குள் 70 முதல் 80 கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ள கார்த்தி, அடுத்து ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு 'ஜப்பான்' என டைட்டில் முடிவாகியுள்ளதாகவும், விரைவில் இதன் சூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால், கார்த்தி தற்போது ஜப்பான் ஷூட்டிங் கிளம்ப ரெடியாகிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











