Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“கடவுள் பக்தி.. இந்து மதம்..” சூர்யா - ஜோ திருமண சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகுமார்!
Recommended Video
சென்னை: அடுத்தவர்களை நேசிப்பவர்களும், அவர்களுக்கு உதவி செய்பவர்களும் தான் உண்மையான பக்தி மான் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் சிவகுமார் பற்றியும், அவர் குடும்பத்தினர் பற்றியும் சில விரும்பத்தகாத செய்திகள் வெளியாகியபடி உள்ளன. குறிப்பாக ஜோதிகாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. மேலும், அவர்களுடைய கடவுள் பக்தி மற்றும் மதம் தொடர்பாகவும் இணையத்தில் சில வதந்திகள் பரவியது.
இந்நிலையில், இந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சிவகுமார் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கடவுள் நம்பிக்கை எப்படிபட்டது என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நான்தான் வாய்ப்பு கொடுத்தேன்.. இப்போ என் மார்க்கெட்டே போச்சு.. இளம் நடிகரால் ஷாக்கான மாஸ் ஹீரோ!

கடவுள் நம்பிக்கை
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?. சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லக்ஷ்மி, சரஸ்வதி, காமாட்சி, மீனாக்ஷி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி வரலாறு
கடவுளுக்கு வடிவம் இல்லை. ஆண், பெண் என்ற பேதம் இல்லை! ‘கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல' என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ‘ஹேராம்' என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.

முருக பக்தர்
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன்.இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன.

ராமாயணம் - மகாபாரதம்
இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். ‘யு ட்யூப்'பில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம்.

உண்மையான பக்தி
உண்மையான பக்தி என்பது ‘அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல்'. இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன.'' இவ்வாறு கூறியுள்ளார்.