twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாநிதி கண்ணின் ஓரம் கசிந்த கண்ணீர்..அதுவே கடைசி சந்திப்பு..நடிகர் சிவக்குமாரின் உருக்கமான பதிவு!

    |

    சென்னை : நடிகர் சிவக்குமார், கலைஞரின் பிறந்த நாளான இன்று அவரோடு இருந்த அனுபவத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

    முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

    கதவைத்திறந்து பறக்க காத்திருக்கும் ரஷ்மிகா... சிரிப்பால் மயக்கும் புகைப்படம்!கதவைத்திறந்து பறக்க காத்திருக்கும் ரஷ்மிகா... சிரிப்பால் மயக்கும் புகைப்படம்!

    உருக்கமான பதிவு

    உருக்கமான பதிவு

    இந்நாளில் கலைஞரை , நடிகர் சிவக்குமார் இறுதியாக 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ந் தேதி சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், கலைஞர் நினைவு இழந்து படுக்கையில் இருந்த தருவாயில் , நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது தமிழும் , செல்வியும் என்னை கலைஞரிடம் அழைத்து சென்று, சிவக்குமார் அண்ணன் வந்திருக்கார் பாருங்க என்று கூறினார்கள்.

    மனோகரா படக்காட்சியை

    மனோகரா படக்காட்சியை

    அவர் முகம் எந்த வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. அப்போது, தமிழருவி மணியனுடன் சிவாஜி எனும் தவப்புதல்வன் புத்தகம் எழுதியிருந்தார். அதில் இடம் பெற்ற மனோகரா படத்தின் தர்பார் காட்சியை டிவியில் போட்டு, அவர் அருகில் சத்தம் அதிகமாக வைத்து அவரை அதை கேட்கவைக்கலாம் என யோசித்தோம். அந்த காட்சியை போட, அதன் வசனம் "புருசோத்தமரே மொழியிலே" என தொடங்கும் நீளமான அந்த உணர்ச்சிகரமான வசனத்தை 1.30 நிமிடம் போட்டோம்.

    மூக்கு விடைக்கல...உதடு துடிக்கல

    மூக்கு விடைக்கல...உதடு துடிக்கல

    அவர அருகே சென்று பார்த்தோம் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, நான் அருகில் சென்று பார்த்தேன். மூக்கு விடைக்கல...உதடு துடிக்கல.. ஆனால், கண்ணில் மட்டும் ஒரு சொட்டு தண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்து விட்டேன். அதுதான் நான் அவரை கடைசியாக பார்த்தது என்றார் சிவக்குமார்.

    Recommended Video

    Karunanidhi Statue-க்கு பின்னால் இருக்கும் History! #Politics | OneIndia Tamil
     சமூகநீதித் தலைவர்

    சமூகநீதித் தலைவர்

    அதேபோல, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்,'என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Sivakumar's emotional post on Kalaignar karunanidhi Birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X