For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வீட்டில் தேசிய கொடி...சர்ச்சையில் சிக்கிய சூரி..வறுத்து எடுக்கும் சமூக வலைத்தளம்!

  |

  சென்னை : நடிகர் சூரி தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

  Recommended Video

  India-க்கு கிடைத்துள்ள Independence யாருக்கும் கிடைக்காது | Actor Soori Speech

  மதுரை மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவரான சூரி சினிமா நடிகராகும் கனவுகளுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். 1998-ல் வெளியான மறுமலர்ச்சி' திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைகாட்டினார்.

  2009-ல் சுசீந்திரன் இயக்குநராகவும் விஷ்ணு விஷால் நடிகராகவும் அறிமுகமான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் சூரிக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

  அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த 'தீயவர் குலைகள் நடுங்க’ டீம்: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த 'தீயவர் குலைகள் நடுங்க’ டீம்: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

  நடிகர் சூரி

  நடிகர் சூரி

  வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் 50 பரோட்டாக்களை அசால்ட்டாக சாப்பிட்டு பரோட்டா சூரி என பெயர் எடுத்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் கவுண்டர்மணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், யோகிபாபு என்ற வரிசையில் இன்று நடிகர் சூரிக்கு முக்கிய இடம் உண்டு.

  பல படங்களில்

  பல படங்களில்

  இதையடுத்து விமலுடன் களவாணி, நான் மகான் அல்ல, மனம் கொத்திப் பறவை, சுந்தரபாண்டியன், தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களில் முதன்மை நகைச்சுவை நடிகராக அசத்தினார். கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து ஸ்டார் அந்தஸ்தை பிடித்து விட்டார்.

  விடுதலை

  விடுதலை

  காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கான்ஸ்டபிளாக நடித்து வருகிறார். 'விடுதலை' படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரிக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இப்படித்தான் அவமதிப்பதா?

  இப்படித்தான் அவமதிப்பதா?

  இந்நிலையில், நடிகர் சூரி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது அபார்ட்மெண்டில் தேசிய கொடியை ஏற்றி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தேசிய கொடியை வீடுதுடைக்கும் மாப் குச்சியில் கட்டி உள்ளீர்கள்.தேசிய கொடியை இப்படித்தான் அவமதிப்பதா என கேட்டுள்ளார்கள். பலரும் அவருக்கு இணையத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  எல்லாமே சர்ச்சை

  எல்லாமே சர்ச்சை

  மதுரையில் நடைபெற்ற விருமன் இசைவெளியீட்டு விழாவில், ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவரைப் படிக்க வைப்பது பல ஜென்மம் பேசும் என்று சூரி பேசிய நிலையில், அது சர்ச்சை ஆனதை அடுத்து, எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு நான் தவறாக கூறவில்லை என்று மன்னிப்பு கேட்டிருந்தார். என்னமோ தெரியல சூரி எதை செய்தாலும் அது சர்ச்சையாகி விடுகிறது என அவரது ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

  English summary
  Actor Soori insulted National flag : 75வது சுதந்திர தின கொண்டாட்டம், நடிகர் சூரி தேசிய கொடி பிரச்சனை, ரசிகர்கள் கிண்டல்
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X