வெரைட்டி ரைஸ் ரூ.30...முழு சாப்பாடு ரூ.60...அரசு மருத்துவமனையில் அசத்தும் சூரியின் கேன்டீன்

மதுரை : தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் நடிகர் சூரியும் ஒருவர். ஆரம்பத்தில் மிக சிறிய ரோல்களில் சினிமாவில் தலை காட்டி வந்த சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு அனைவருக்கும் தெரிந்த பிரபல நடிகராகி விட்டார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டி சீனில் நடித்து பிரபலமானதால் இவரை அனைவரும் பரோட்டா சூரி என்றே கூப்பிட துவங்கினார்கள். சிவகார்த்திகேயன் - சூரியின் காமெடி காம்போ செம ஹிட் அடித்தது. பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார் சூரி.

கவுண்டமணி - செந்தில், வடிவேலு இல்லாத குறையை தீர்த்து வைத்தவர் சூரி தான். காமெடி நடிகராக பிரபலமான சூரி, பிறகு கேரக்டர் ரோல்களிலும் நடிக்க துவங்கி, அதிலும் வெற்றி பெற்றார்.

காமெடியன் டூ ஹீரோ

காமெடியன் டூ ஹீரோ

தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்திருந்தாலும், அவர் நக்சலைட்டாக நடித்துள்ளார். இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் சூரி நடித்துள்ளார். அசத்தல் போலீஸ் போல் இருக்க வேண்டும் என்பதற்காக பாடி பில்டிங் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஆக்ஷன் ஹீரோ லுக்கிற்கு மாறி உள்ளார் சூரி.

வெறித்தனமான ஒர்க்அவுட்

வெறித்தனமான ஒர்க்அவுட்

விடுதலை ஷுட்டிங் ஸ்பாட்டில் கூட வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்தும் சூரியின் வீடியோ சமீபத்தில் வெளியாகி டிரெண்டானது. விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க கமிட்டாகி உள்ளார் சூரி. விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங்கும் துவங்கப்பட உள்ளது.

ஓட்டல் பிசினசில் சூரி

ஓட்டல் பிசினசில் சூரி

சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சூரி, மதுரையில் பல இடங்களில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார். அம்மன் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் சைவ உணவகமும், அய்யன் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் அசைவ உணவகமும் நடத்தி வருகிறார். இந்த உணவகங்களை சூரியின் தம்பி தான் கவனித்து வருகிறார்.

மதுரையில் ஃபேமசான சூரி

மதுரையில் ஃபேமசான சூரி

சமீப ஆண்டுகளில் சூரி கடை பனியாரம், வடை போன்ற அயிட்டங்கள் மதுரை மக்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டது. மதுரையில் சுவை, தரமான உணவு எங்கு கிடைக்கும் என்று கேட்டால் அனைவரின் ஃபர்ஸ்ட் சாயிசாக இருப்பது அம்மன் ரெஸ்டாரன்ட் தான். அந்த அளவிற்கு மதுரை மக்களிடம் உணவக பிசினசிலும் ஃபேமசாகி விட்டார் சூரி.

வெரைட்டி ரைஸ் ரூ.30...முழு சாப்பாடு ரூ.60

வெரைட்டி ரைஸ் ரூ.30...முழு சாப்பாடு ரூ.60

பல கிளைகளைக் கொண்ட அம்மன் ரெஸ்டாரன்ட், தற்போது மதுரை அரசு மருத்துவமனை கேன்டீனிலும் துவங்கப்பட்டுள்ளது. இங்கு தயிர் சாதம், நெய் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் என அனைத்து வெரைட்டி ரைஸ்களும் வெறும் ரூ.30 மட்டும் தான். சாம்பார், ரசம், தயிர் உடனான முழு சாப்பாடு ரூ.60 மட்டும் தானாம். இந்த கேன்டீனை சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் திறந்து வைத்தார்.

சூரியை பாராட்டும் மக்கள்

சூரியை பாராட்டும் மக்கள்

இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சூரி, அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் அனைவரும் கஷ்டபடும் ஏழைகள், நோயாளிகள் தான். அவர்களுக்கு ஏற்ற விலையில், அவர்களுக்கும் வாய்க்கு ருசியாகவும், தரமானதாகவும் நல்ல சாப்பாட்டை தர நினைத்தோம். மக்களின் ஆதரவு பெற்ற அம்மன் கேன்டீன் தற்போது அரசு மருத்துவமனையிலும் துவங்கப்பட்டுள்ளது என்றார். லாபத்தை விட தரத்திற்கு முக்கியத்துவம், ஏழை மக்களுக்காக யோசிக்கும் சூரியின் எண்ணத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X