»   »  காரை வழிமறித்து தாக்கிய ‘நிஜ’ பேய்... வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட ‘தில்’ சூரி

காரை வழிமறித்து தாக்கிய ‘நிஜ’ பேய்... வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட ‘தில்’ சூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூரி பழனி சாலையில் பேயை நிஜத்தில் சந்தித்ததாக தனது அனுபவத்தை வீடியோவுடன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் சூரி. தற்போது முன்னணி காமெடி நாயகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில், நிஜ பேயை நேரில் பார்த்ததாகக் கூறி திகில் கிளப்பியிருக்கிறார் அவர். இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாலையில் பேய்...

சாலையில் பேய்...

அதாவது நேற்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் கோவை-பழனி நெடுஞ்சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தாராம் சூரி. அப்போது தூரத்தில் சாலையின் நடுவே ஓர் உருவம் நிற்பது போன்று இருந்துள்ளது.

அதிர்ச்சி...

அதிர்ச்சி...

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூரி, தனது ஓட்டுநரிடம் காரின் விளக்குகளை அணைத்து விட்டு, அந்த உருவத்தின் மீது மோதுமாறு கூறினாராம். அவரும் அப்படியே செய்துள்ளார்.

பலமான சத்தம்...

பலமான சத்தம்...

அப்போது காரை யாரோ பலமாகத் தாக்குவது போன்ற சத்தம் மட்டும் கேட்டுள்ளது. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

வைரல் வீடியோ...

சுமார் ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோக் காட்சியை, தனது நிஜ பேய் அனுபவம் என்ற தலைப்பில் நடிகர் சூரி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

English summary
Tamil cinema actor and comedian shared a paranormal encounter on Facebook and alleged that he saw a ghost on a highway.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil