தமன்னாவோடு நிச்சயதார்த்தம்... திருமணத்திற்கு ரெடியாகும் நடிகர் சௌந்தர்ராஜா!
Recommended Video

சென்னை : நடிகர் சௌந்தர்ராஜா 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தர்மதுரை', 'தெறி', 'திருட்டு பயலே 2' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 'தர்மதுரை' படத்தில் விஜய் சேதுபதியின் உடன் பிறந்தவராக நடித்திருந்தார்.
சினிமா தாண்டி சமூக நலன் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபாடு கொண்டவர் சௌந்தர்ராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், சீமைக்கருவேல மரங்கள் அழிப்பு போன்றவற்றில் முன் வந்து கலந்துகொண்டவர். சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழா நிகழ்வின் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார் சௌந்தர்ராஜா.

நடிகர் சௌந்தர்ராஜாவுக்கு, தமன்னா என்ற பெண்ணுடன் மே மாதம் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

சௌந்தர்ராஜாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் தமன்னா, 'கிரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக செயல்படுகிறார். மே மாதம் உசிலம்பட்டியில் நடைபெறவிருக்கும் இவர்களது திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











