Kantara Chapter 1: காந்தாராவைப் பாராட்டிய காஞ்சனா நடிகர்.. முத்தமெல்லாம் தராறேப்பா!

சென்னை: காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ள ரிஷப் ஷெட்டியை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீமான் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " ரிஷப் ஷெட்டி, என்ன மாதிரியான நடிகருங்க நீங்க. என்ன மாதிரி இயக்குநர் நீங்க. காந்தாரா 2 படத்தை உருவாக்கினார்கள் என்பதை பேசும்போதே பயமாக இருக்கும். ஆனால் அந்த படத்தை ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து, ஒரு புது ஊரை உருவாக்கி, நான் படம் பார்க்க போனபோது வேறு ஏதோ ஒரு ஊருக்குள் சென்று விட்டு வெளியே வந்தது போல, படம் முடிந்து வந்த போது இருந்தது. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தில் அனைத்து கதாபாத்திரங்கள் இடமும் சிறப்பாக வேலை வாங்கி உள்ளீர்கள்.

Actor Sriman Appreciates Kantara Chapter 1 Movie And Rishab Shetty on X Page
Photo Credit:

படத்தில் நடித்த அனைவரும் அந்ததந்த கதாபாத்திரங்களாக தான் வாழ்ந்துள்ளார்கள். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். சிவபெருமான் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சிவனும் பார்வதியும் தான் எல்லாமே என்று கருதுபவன் நான். சிவ பெருமான் தான் உங்களுக்குள் புகுந்து, அப்படி ஒரு நடிப்பைக் கொண்டு வந்துள்ளார். புல்லரிக்கிறது. இந்த கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக எதையும் செய்துவிட முடியாது.

ஒற்றுமை: இந்த பட்ஜெட்டில், இவ்வளவு தரமான படத்தை இந்தியாவில் வேறு யாராவது செய்ய முடியுமா என்றால் தெரியவில்லை. ஒருவேளை வரும் காலத்தில் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முயற்சிக்கலாம். காந்தாரா 1 மற்றும் காந்தாரா 2க்கும் இடையில் உள்ள ஒற்றுமை, அந்த கடவுளும் சத்தமும் தான். கடவுள் படத்தில் கிளைமாக்சில் கெட்டத்தை அழிப்பதுதான் கதையாக இருக்கும். ஆனால் அதை எப்படிக் கொடுக்கிறார்கள் என்பதுதான் விஷயமே இருக்கிறது. அதை மக்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள போகிறார் என்பதும் முக்கியம். அந்த வகையில் நீங்கள் 100 சதவீதம் வெற்றி பெற்று விட்டீர்கள்.

Actor Sriman Appreciates Kantara Chapter 1 Movie And Rishab Shetty on X Page
Photo Credit:

முத்தம்: காந்தாரா 2 வழக்கமான படம் இல்லை. படம் பார்க்க தியேட்டருக்குள் சென்றால், படத்தில் வேறு ஒரு உலகத்திற்குள் செல்கிறோம். படம் முடித்து வந்து ஆச்சரியத்துடன் உங்களைப் பாராட்டுகிறோம். ஆர்ட் டிபார்ட்மெண்ட் சிறப்பு, காஸ்ட்யூம்ஸ் சிறப்பு, இசை அல்டிமேட். படத்தின் தொடக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இசையை ஏத்தி, ஏத்தி, கிளைமாக்ஸில் வேற லெவல் செய்து விட்டீர்கள். மூன்றாவது பாகத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று பேசியுள்ளார். அந்த வீடியோவை முடிக்கும்போது ரிஷப் ஷெட்டிக்கு முத்தமும் கொடுக்கிறார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X