2026 இல் விஜய் VS சூர்யா? பற்றிக் கொண்ட சோஷியல் மீடியா.. பறந்து வந்து விளக்கம் கொடுத்த ரசிகர் மன்றம்

சென்னை: நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய பின்னர், அவர் அதிகம் விமர்சித்த கட்சி என்றால் அது மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவைத்தான். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை கூட அவர் திமுக அளவுக்கு விமர்சிக்கவில்லை. இப்படி இருக்கும்போது, கடந்த வாரத்தில் இருந்தே சமூக வலைதளங்களில் வெளியான தகவல், நடிகர் சூர்யா திமுகவில் இணைய போவதாகவும், அவரை விஜய்க்கு எதிராக களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சுகள் ஓடிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து, நடிகர் சூர்யாவின் அகில இந்திய சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது கருப்பு படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் கூட நடிகர் சூர்யாவின் அகரம் 15வது ஆண்டு விழா நடைபெற்றது. இது தொடர்பான பேச்சுகளும் சூர்யாவுக்கு வாழ்த்துகளும் என மொத்த சமூக வலைதளங்களும் அகரம் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோக்களால் தான் நிரம்பி இருந்தது.

Actor Suriya Fans Club Refused and Gives Clarification About Suriya Entry Politics in 2026

இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல், நடிகர் சூர்யா திமுகவில் இணைய போவதாகவும், அவரை விஜய்க்கு எதிராக களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சுகள் ஓடிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து, நடிகர் சூர்யாவின் அகில இந்திய சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரசிகர் மன்றம் விளக்கம்: அதில், " ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சினிமாவில் மட்டுமே கவனம்: சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள். அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி! அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X