Don't Miss!
- Sports
மகளிர் ஐபிஎல் - 5 அணிகளுக்கான ஏலம் மூலம் ரூ. 4670 கோடி வருமானம்.. எந்த அணிகள் வாங்கியது.. விவரம்
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
- Lifestyle
பெண்கள் ஆண்களிடம் ரகசியமாக எதிர்பார்க்கும் 'அந்த' குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்ககிட்ட இதெல்லாம் இருக்கா?
- News
"மசாஜ் சென்டர்".. சிக்க போகும் முக்கிய பிரமுகர்கள்.. யாரந்த "கருப்பு ஆடுகள்".. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
- Technology
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஷூட்டிங் முடியும் வரை காத்திருந்த பிரபாஸ்… சூர்யாவே நினைத்துப் பார்க்காத அந்தத் தருணம்!
சென்னை: தமிழில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கும் 'சூர்யா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள சூர்யா, தெலுங்கு நடிகர் பிரபாஸுடனான நட்பு குறித்து மனம் திறந்துள்ளார்.
கோலிவுட்டில் 13 ஆண்டுகள்.. சூர்யா 42 குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு!

ஜெய் பீம் படத்துக்கு பாராட்டு
சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யா 42 படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசலில் நடிக்கவுள்ளார் சூர்யா. அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் உட்பட மேலும் சில படங்களில் நடிக்கவும் சூர்யா கமிட் ஆகியுள்ளார். இதனிடையே சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'ஜெய் பீம்', சமீபத்தில் நடைபெற்ற கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கே ஜெய்பீம் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டது.

சூர்யா – பிரபாஸ் நட்பு
சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல், அவருக்கும் தெலுங்கு முன்னணி நடிகரான பிரபாஸுக்கும் இடையே நல்ல நட்பும் காணப்படுகிறது. பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே, பிரபாஸுடனான நட்பு குறித்து நடிகர் சூர்யா மனம் திறந்துள்ள பேசியுள்ளார்.

ஷூட்டிங் முடியும் வரை வெயிட்டிங்
இந்நிலையில், பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ள சூர்யா, பிரபாஸை நேரில் சந்தித்தது பற்றி பேசியுள்ளார். அதில், "நான் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். அப்போது பிரபாஸ் என்னை இரவு சாப்பிட வரவேண்டும் என அழைத்திருந்தார். நானும் வருகிறேன் என சொல்லிருந்தாலும் எனக்கு ஷூட்டிங் முடிய இரண்டு மணி நேரம் லேட்டாகி விட்டது. மாலை 6 மணிக்கு தொடங்க இருந்த ஷூட்டிங், இரவு 8 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 11:30 மணி வரை ஆகிவிட்டது. நான் பிரபாஸை பிறகு சந்திக்கலாம் என்று நினைத்தேன். அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் எனவும் முடிவு செய்துவிட்டேன்" எனக் கூறியிருந்தார்.

தரமான பிரியாணி விருந்து
தொடர்ந்து பேசியுள்ள சூர்யா, "அன்று இரவு ஹோட்டல் அல்லது மெஸ்ஸில் இருந்து சாப்பாடு வரும் என நினைத்தேன். இரவு 11.30 மணியளவில், ஹோட்டலுக்கு கீழே பிரபாஸ் எனக்காக சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பிரபாஸ் அவரது அம்மா தயாரித்த உணவை எனக்கு கொண்டு வந்தார். என் வாழ்நாளில் அவ்வளவு சூப்பரான பிரியாணி சாப்பிட்டதில்லை" எனக் கூறியுள்ளார். பிரபாஸ் குறித்து சூர்யா உருக்கமாக பேசியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.