நடிகர் சூர்யா வீட்டிற்குள் நடந்த தங்கம் மோசடி.. ரூ 2.15 கோடி சுருட்டிய பெண்.. நடந்தது என்ன?

சென்னை: நடிகர் சூர்யா வீட்டில் வேலைப் பார்த்த பெண், குறைந்த விலையில் தங்க காசு வாங்கித் தருவதாக கூறி. நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் ரூ.42 லட்சத்தை சுருட்டி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தாய், மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி ஜார்ஜ் பிரபு, ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணியாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாம்பழம் காவல் நிலையத்தில், பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சூர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த திநகரை சேர்ந்த, சுலோச்சனா மற்றும் அவரது மகன்கள் தன்னிடம் குறைந்த விலைக்கு தங்க காசுகள் வாங்கி தருவதாக கூறி 42 லட்சம் ரூபாய் வரை பெற்று விட்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

Suriya gold coin fraud

நடிகர் சூர்யாவின் பாதுகாவலர்: இது குறித்து சுலோச்சனாவிடம் போலீசார் விசாரணை நடத்த இருந்த நிலையில், சுலோச்சனா குடும்பத்துடன் தலைமறைவானார். மேலும், அவர்களது செல்ஃபோனும் சுவிட்ச் ஆஃபானதால் விசாரணை மேற்கொள்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. பின், போலீசார் துருவி துருவி நூற்றுக்கும் மேற்பட்ட செல்ஃபோன்களை ஆய்வு செய்ததில் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த சுலோச்சனா, அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பணத்தின் மீது ஆசை: நான்கு பேரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திதிக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சுலோச்சனாவின் கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், அவர் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால், வீட்டு வேலை செய்து இரண்டு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக திநகரில் உள்ள சூர்யாவின் சுலோசனா வேலை செய்துள்ளார். சுலோச்சனாவின் மகன்கள் சூர்யா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால், சூர்யா வீட்டில் இருக்கும் கார், ஆடம்பரமான பங்களாவை பார்த்து அவர்களுக்கும் ஆடம்பரமாக வாழ ஆசை வந்துள்ளது.

தங்க காசு மோசடி: இதனால், சுலோச்சனா அவரது இரண்டு மகன்களும் சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். இதில், சிலர் சேர்ந்தாலும் பணம் போதுமானதாக கிடைக்கவில்லை. இதனால் தீபாவளி பண்டின் மூலம் அறிமுகமான நண்பர்களை வைத்து மிகப் பெரிய மோசடி ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அதாவது, ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால், ஒரு மாதத்தில் ஒரு கிராம் தங்க காசு தருவதாகவும், அதேபோல 6500ரூபாய் கொடுத்தால், ஒரு வாரத்திற்கு ஒரு கிராம் தங்க காசு தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறிள்ளார். இதை நம்பி,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் பணம் செலுத்தி உள்ளனர். முதல் சில மாதங்களுக்கு பணம் செலுத்திய நபர்களுக்கு, சரியான முறையில் தங்க காசுகளை வழங்கி நம்பிக்கைகொடுத்துள்ளார்.

42 லட்சம் கொடுத்தார்: சில மாதங்களுக்கு பின், தங்களிடம் பணம் கட்டுபவர்களிடம் கடைசியாக. தன்னிடம் 600 தங்க காசுகள் மட்டுமே உள்ளது. யார் முதலில் பணம் தருகிறீர்களோ அவர்களுக்கு கொடுத்துவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இதையடுத்து, சூர்யாவின் தனி பாதுகாவலரான அந்தோனி, தந்தையின் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார். சுலோச்சனா, அந்த பணத்திற்கு ஏற்றார் போல, தங்க காசுகளையும் கொடுத்து அவரை நம்ப வைத்து இருக்கிறார். கடைசியாக 600 தங்க காசுகள் மட்டுமே இருப்பதாக சுலோச்சனா சொன்னால், அதை வாங்குவதற்காக, அந்தோணி மனைவியின் தங்க நகைகளை விற்றும், லோன் எடுத்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி சுலோசனாவிடம் பணத்தை கொடுத்து இருக்கிறார்.

தீவிர விசாரணை: அதன்பின் தான் காவலர் அந்தோணிக்கு ஏமாற்றப்பட்டது தெரியவந்தை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதே போல சுலோச்சனா பல்வேறு இடங்களில் இரண்டு கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதும், அந்த பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது. நான்கு பேரையும் கைது செய்திருக்கும் போலீசார் அவர்களிடமிருந்து எந்த தங்க காசையோ, பணத்தையோ மீட்கவில்லை. மோசடி செய்த பணத்தை, எங்கே வைத்திருக்கிறார்கள் யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுலோச்சனாவின் தங்க காசு மோசடி தெரிந்தவுடன் நடிகர் சூர்யா அவர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X