Don't Miss!
- News
கலெக்டரை மாத்துங்க.. பணப் பட்டுவாடா ஜரூர்.. அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தேமுதிக புகார்!
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Sports
ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்!
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரசிகர்களின் ஆதரவை பெற்ற கார்கி...மனதார நன்றி சொன்ன சூர்யா
சென்னை : டைரக்டர் கெளதம் ராமச்சந்திரன் எழுதி, இயக்கிய படம் கார்கி. இதில் சாய் பல்லவி லீட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியுடன் இணைந்து சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் உருவாக்கப்பட்ட காக்கி படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு, அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதில் கார்கி என்ற டைட்டில் ரோலில் சாய் பல்லவி நடித்திருந்தார்.
சாய் பல்லவி வசிக்கும் பிளாட்டிற்கு அருகில் உள்ள பிளாட்டில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அந்த வழக்கில் குற்றவாளிகள் லிஸ்ட்டில் சாய் பல்லவியின் அப்பாவின் பெயரும் சேர்க்கப்படுகிறது. தனது அப்பா நிரபராதி என்பதை நிருபிக்கவும், உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரவும் சாய் பல்லவி நடத்தும் சட்ட போராட்டம் தான் கார்கி படத்தின் கதை.
இந்த படத்திற்கு பெரும்பாலானவர்கள் 4 முதல் 4.5 என்ற அளவிலேயே ரேட்டிங் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சாய் பல்லவியின் நடிப்பு அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கார்கி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ஆதரவிற்கு நடிகர் சூர்யா, ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். சூர்யா தனது ட்விட்டர் பதிவில், கார்கி படத்திற்கு அனைவரும் அளித்துள்ள பேராதரவிற்கு நன்றி. சிறப்பாக எழுதப்பட்டு, சிறப்பாக படமாக்கப்பட்ட கார்கி ஜோ மற்றும் என்னுடைய நினைவில் எப்போதும் நீங்காமல் இருக்கும். படத்தை ஆதரித்த மீடியா, பத்திரிக்கை, நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கு.. நடிகர் சந்தானம் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!
இதை பார்த்த ரசிகர்கள் இப்படி நல்ல படத்திற்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி சார். விரைவில் ஒரு கதையில் நீங்களும் சாய் பல்லவியும் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறோம். இப்போ கார்கி, அடுத்து வணங்கானா. அடுத்தடுத்து மறக்க முடியாத படங்களை கொடுத்து வருவதற்கு நன்றி சார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.