ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி கூறிய சூர்யா… அதையும் வைரலாக்கிய ரசிகர்கள் !
சென்னை : நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா தனது 46 வது பிறந்த நாளை கடந்த 23ந் தேதி கொண்டாடி இருந்தார். சூர்யாவின் ரசிகர்கள் இணையமே அதிரும்படி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
நடிகர் சூர்யா தன்னை மனதார வாழ்த்திய ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார். இந்த ட்விட்டர் பதிவையும் சூர்யாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இணையத்தில் டிரெண்டிங்
சூரரைப்போற்று படத்துக்குப்பிறகு பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 22ந் தேதி வெளியானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜெய் பீம்
இதையடுத்து, சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யாவின் 39வது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்திற்கு ஜெய் பீம் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோல், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நெகிழ்ச்சியோடு நன்றி
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் 23ந் தேதி கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்கள் ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், இணையத்தில் சூர்யாவின் ரசிகர்கள் வாழ்த்து செய்திகளை தெறிக்கவிட்டனவர். இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியோடு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

ரசிகர்களுக்கு நன்றி
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துக்களும் சமூக பொறுப்புள்ள செயல்களும் இந்த நாளை எனக்கு மிக முக்கிய நாளாக மாற்றியுள்ளது. உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்த பதிவை சமூக வலைத்தளத்தில் சூர்யாவின் ரசிகர்கள் கோலாகலமாக அதை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











