ஆயிரம் கோடி பட்ஜெட் அடிச்சு தூள் கெளப்புறோம்… சூர்யா – ஷங்கர் கூட்டணியில் மெகா கோலிவுட் மஜா

சென்னை: சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்', சிவா இயக்கும் 'சூர்யா 42' படங்களில் நடித்து வருகிறார்.

இந்த 2 படங்களையும் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா..

இந்நிலையில், முதன்முறையாக ஷங்கர் - சூர்யா கூட்டணியில் மெகா பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் சூர்யா 42 மோஷன் போஸ்டர்

தொடர்ந்து ட்ரெண்டிங்கில் சூர்யா 42 மோஷன் போஸ்டர்

சூர்யாவின் படங்கள் குறித்த புதிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தது சிவா இயக்கும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். சூர்யா 42 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படம் கண்டிப்பா வேற லெவலில் இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். சூர்யாவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக புதிய இயக்குநர்களுடன் சூர்யா

முதன்முறையாக புதிய இயக்குநர்களுடன் சூர்யா

'சூர்யா 42' படத்திற்காக சிவா இயக்கத்தில் முதன்முறையாக இணைந்துள்ள சூர்யா, வாடிவாசல் மூலம் வெற்றிமாறன் இயக்கத்திலும் முதல்முறை நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரேகட்டமாக நடைபெறும் என சொல்லப்படுகிறது. வணங்கான், வாடிவாசல், சூர்யா 42 ஆகிய படங்களை முடித்துவிட்டு, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் சூர்யா கூட்டணி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால், சூர்யா - ஷங்கர் இணையும் முதல் படமாக இது இருக்கும்.

வேள்பாரி நாவலை கையிலெடுக்கும் சூர்யா - ஷங்கர்?

வேள்பாரி நாவலை கையிலெடுக்கும் சூர்யா - ஷங்கர்?

கார்த்தி நடித்த விருமன் பட ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் எம்பியும் எழுத்தாளருமான சு வெங்கடேசனும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, சு வெங்கடேசனுடன் இணைந்து விரைவில் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும், வேலையே ஏற்கனவே தொடங்கிவிட்டோம், அதுகுறித்து சீக்கிரமே அபிஸியாலா சொல்வதாக கூறியிருந்தார். சு வெங்கடேசனின் வேள்பாரி நாவலை படமாக எடுக்கவிருப்பதை தான் சூர்யா கூறியதாக தகவல் வெளியானது. இப்போது அந்தப் படத்தில் தான் சூர்யாவும் ஷங்கரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா - ஷங்கர் படத்தின் பட்ஜெட் இவ்ளோவா?

சூர்யா - ஷங்கர் படத்தின் பட்ஜெட் இவ்ளோவா?

முன்னதாக 'சூர்யா 42' தான் வேள்பாரி நாவலை பின்னணியாகக் கொண்டு உருவாகிறது என சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் சு வெங்கடேசனின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், இப்போது ஷங்கர் தான் வேள்பாரி நாவலை திரைப்படமாக இயக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தை ஆயிரம் கோடி என மெகா பட்ஜெட்டில் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இது உறுதியானதால், கோலிவுட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X