சில கேரக்டர்கள் நம்மை டேமேஜ் செய்யும்.. ஆனால் அது தேவைப்படுது.. ரோலக்ஸ் குறித்து பேசிய சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், கோவாவை தொடர்ந்து தற்போது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் களைகட்டியுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தொடர்ந்து தன்னுடைய வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்கள் கவர்ந்து வருவது தெரிந்த விஷயம்தான். இவரது முந்தைய படங்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில் தற்போது சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

 சூர்யா 42 படம்

சூர்யா 42 படம்

இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு படக்குழு பயணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்தப் படத்தில் 5 வித்தியாசமான கெட்டப்புகளில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

 சூர்யாவின் மிரட்டல் கேரக்டர்

சூர்யாவின் மிரட்டல் கேரக்டர்

இந்தப் படத்திற்கு முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். படத்தின் க்ளைமாக்சில் 4 நிமிடங்களே வரும் இந்தக் கேரக்டர் படத்தில் மிரட்டியது. படத்தின் வெற்றிக்கு இந்த கேரக்டரும் முக்கியமான காரணமாக அமைந்தது. சூர்யாவை இப்படிப்பட்ட வில்லன் கேரக்டரில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தனக்கு இதுவும் வரும் என்று நிரூபித்திருந்தார் சூர்யா.

ரோலக்ஸ் கேரக்டருக்கான காரணம்

ரோலக்ஸ் கேரக்டருக்கான காரணம்

இந்நிலையில் பிரபல வாரயிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டியில், முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேடில் அமைந்துள்ள ரோலக்ஸ் கேரக்டரை தான் ஏற்று நடித்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரோலக்ஸ் கேரக்டரை அதிகப்படியான ரசிகர்கள் விரும்பியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சில சமயங்களில் இதுபோன்ற கேரக்டர்கள் நம்மை டேமேஜ் செய்தாலும், ஒரு நடிகராக இவை தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விக்ரம் படத்தில் சில நிமிடங்களே ரோலக்ஸ் வந்தாலும், படத்தின் அடுத்த பாகத்திற்கான லீடாக இந்த கேரக்டர் அமைந்துள்ளது. தற்போது தளபதி 67 படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். தொடர்ந்து அவர் விக்ரம் படத்தின் அடுதத பாகத்தையும் இயக்கவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சூர்யாவின் கேரக்டர் பிரதானமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக தற்போதே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X