twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்வரிடம் நேரில் ஆசி பெற்ற சூர்யா.. தனுஷ், உதயநிதி வாழ்த்து!

    |

    சென்னை : நேற்றைய தினம் 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழின் 3 படங்கள் மற்றும் அதன் கலைஞர்கள் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளனர்.

    இதில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் 5 விருதுகளை பெற்றுள்ளது.

    இன்றைய தினம் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்துள்ளது.

    இனி இப்படி போட்டோ ஷூட் பண்ணுவ?: 'அவனா நீ’ ரேஞ்சுக்கு ரன்வீர் சிங்கை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!இனி இப்படி போட்டோ ஷூட் பண்ணுவ?: 'அவனா நீ’ ரேஞ்சுக்கு ரன்வீர் சிங்கை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

    நடிகர் சூர்யா

    நடிகர் சூர்யா

    நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது சூரரைப் போற்று படம். கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக வெளியான இந்தப் படத்தை சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் சிறப்பாக கொடுத்திருந்தார் இயக்குநர் சுதா கொங்கரா. படம் வெளியானபோதும் சிறப்பான விமர்சனங்களை இந்தப்படம் பெற்றிருந்தது.

    5 தேசிய விருதுகள்

    5 தேசிய விருதுகள்

    இந்நிலையில் தற்போது சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இசை என்ற 5 பிரிவுகளில் இந்தப் படம் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இதையடுத்து தற்போது இந்தப் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. நாம ஜெயிச்சிட்டோம் மாறா என்ற கோஷத்தை படக்குழுவினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    சூர்யா பிறந்தநாள்

    சூர்யா பிறந்தநாள்

    இந்தப் படத்தில் நடித்ததுடன் தயாரிக்கவும் செய்துள்ள சூர்யாவிற்கு இதன்மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. மேலும் அவர் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுவும் அவரது சந்தோஷம் அதிகரித்துள்ளதற்கு காரணமாக அமைந்துள்ளது.

    திரையுலகினர் வாழ்த்து

    திரையுலகினர் வாழ்த்து

    சூர்யாவின் பிறந்தநாள் மற்றும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு வாழ்த்துமழையை திரையுலகத்தினர் தொடர்ந்து பொழிந்து வருகின்றனர். இதனிடையே இந்த வாழ்த்துக்களுக்கு சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

    முதல்வர் வாழ்த்து

    முதல்வர் வாழ்த்து

    நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருதுகளை தமிழின் சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் சில பெண்களும் மற்றும் மண்டேலா ஆகிய படங்களின் கலைஞர்கள் பெற்றுள்ளனர். இதில் சூரரைப் போற்று சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இதனிடையே இந்த மூன்று படக்குழுவினருக்கும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி வாழ்த்து

    உதயநிதி வாழ்த்து

    மேலும் சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ள சூர்யா உள்ளிட்டவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு அவர் வாழ்த்தியுள்ளார்.

    தனுஷ் வாழ்த்து

    தனுஷ் வாழ்த்து

    இதேபோல நடிகர் தனுஷும் தேசிய விருது பெற்றவர்கள் அனைவருக்கும் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல திரையுலகின் பல நடிகர், நடிகைகள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து

    முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து

    இதனிடையே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ள நடிகர் சூர்யா, இன்றைய தினம் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். முன்னதாக முதல்வர் உள்ளிட்டவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா, நேரில் சென்று முதல்வரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Surya wins National award for Best Actor for Soorarai pottru movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X