»   »  'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம்

'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார்.

1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர் தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர்.

Actor Thavakalai no more

அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42.

Actor Thavakalai no more

தவக்களை 496 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார்.

தவக்களையின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

English summary
Actor Thavakalai passed away on sunday at his house in Chennai. He died of heart attack.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil