Just In
- 1 hr ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 1 hr ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி!
- 2 hrs ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Don't Miss!
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Lifestyle
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- News
கொங்கு மண்டலத்தில் "மாஸ்" ராகுல்.. அதிக சீட் கேட்டு அட்டாக் பண்ணுமா காங்.. செம பிளான்!
- Automobiles
வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொலைவெறியுடன்… ரத்தம் தெறிக்கும்..பிரபல நடிகரின் மாஸ் புகைப்படம் !
கொச்சி : மலையாள திரையுலகில் இப்போது கலக்கி வரும் இளம் நடிகர் டோவினோ தாமஸ் மின்னல் முரளி என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று மற்ற மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இந்திய அளவில் அனைவராலும் விரும்பக்கூடிய இளம் நடிகராக டோவினோ தாமஸ் உள்ளார்.
தெலுங்கில் ரீமேக்காகும் ஓ மை கடவுளே .. பூஜையும் போட்டாச்சு!
நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றிவரும் டோவினோ தாமஸ் தனது கலா திரைப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார்.

சிறு கதாபாத்திரங்களில்
மலையாளத் திரையுலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் இளம் நடிகர் டோவினோ தாமஸ் ஆரம்பத்தில் ஒரு சில குறும் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஏபிசிடி, ஆகஸ்ட் கிளப் என ஒரு சில சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இப்பொழுது முன்னணி நடிகராக உள்ளார்.

மாரி 2ல் வில்லனாக
பிரித்திவிராஜின் மாஸான நடிப்பில் வெளியான செவன்த் டே திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில் இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பட்டையை கிளப்பி வர மாயநதி போன்ற வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான நடிப்பை தொடர்ந்து அளித்து வரும் டோவினோ தாமஸ் தமிழ் ரசிகர்களிடையேயும் மிகவும் பரிச்சயமாக உள்ள நிலையில் தனுஷ் நடிப்பில் உருவான மாரி 2ல் வில்லனாக மாஸ் காட்டியிருப்பார்.

மின்னல் முரளி
ஹீரோவாக நேரடி தமிழ் திரைப்படங்களில் இதுவரை நடித்திராத போதும் தமிழிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில், விரைவில் தமிழ் திரைப்படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வர இப்போது சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகிவரும் மின்னல் முரளி மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்துள்ளது.

கலா
அடுத்தடுத்து மலையாளத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்கள் கைவசம் வைத்திருக்கும் டோவினோ தாமஸ் ஆக்ரோஷமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் கலா திரைப்படத்தில் சில மாதங்களாக நடித்து வந்த நிலையில் இப்போது அதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

கொலைவெறியுடன் சண்டை
கலா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து இதில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் அரை நிர்வாணத்துடன் சட்டை முழுவதும் சேராக இருக்க கொலைவெறியுடன் சண்டை போடுகின்றவாறு உள்ள புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கலா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள டோவினோ தாமஸ்-க்கு அனைவரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் இந்த வெறித்தனமான புகைப்படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.