Don't Miss!
- News
பிளந்த முதுகு.. அண்ணி அனுப்பின போட்டோ.. டான்ஸ் மாஸ்டர் ரமேஷை தேடி வந்த 4 பேர்.. கொலை? தற்கொலை? மர்மம்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
எனக்கே கண்ணிவெடி வைக்கிறாங்க.. இவருக்கு எத்தனை ஏவுகணை விட்ருப்பாங்க: கமல் 60ல் வடிவேலு கலகல!
Recommended Video
சென்னை: கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல் பேசிய கலகலப்பான பேச்சு வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள் மற்றும் சினிமாவில் அவரது 60 ஆண்டுகால சாதனையை பாராட்டும் வகையில் உங்கள் நான் எனும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
அவர்கள் கமலுக்கு வாழ்த்தையும் அவர் கடந்து வந்த பாதையையும் தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவு கூர்ந்தனர். விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி என பலரும் கமலின் சாதனையை பாராட்டி பேசினர்.

கண்ணிவெடி வைக்கிறாங்க
இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேல் கலந்துகொண்டார். அப்போது கமல் குறித்து பேசிய அவர், எனக்கே கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வைக்கிறாங்க.. கமல் இவ்ளோ பெரிய ஆளா வளர்ந்திருக்காருக்கு அவருக்கு எத்தனை ஏவுகணை விட்ருப்பாங்க..

எல்லா வித்தையும்
எத்தனை பாம் வச்சுருப்பாங்க..தவ்வுற இடத்துல தவ்வுறதும் முங்குற இடத்துல முங்குறதும், பறக்குற இடத்துல பறக்குறதும், மறையிற இடத்துல மறையிறதும்னு எல்லா வித்தையும் கத்துக்கிட்டு இன்னைக்கு இந்த இடத்துல நிக்கிறாருன்னா.. எல்லாத்தையும் கடந்து ஜெயிக்கிறாரு.. இவர மாதிரி ஒரு உதாரணமே கிடையாது.

என்னப்பா தெரியும்?
நான் ராஜ்கிரண் சார் மூலமா திரையுலகுக்கு வந்தேன். அதுக்கப்புறம் அண்ணன் கமலோட சேர்ந்து இரண்டு படங்கள்ல நடிக்குற வாய்ப்ப ஆர்வி உதயக்குமார் சார் கொடுத்தார். சிங்காரவேலன் படத்தில் கமலுடன் நடிக்கும்போது அண்ணன் கமல் என் தோளில் கைபோட்டுக்கொண்டு, உனக்கு என்னப்பா தெரியும். எந்த ஊரு நீ? என்றெல்லாம் கேட்டார்.

தேவர்மகன் படம்
நான் ஓரளவு பாடுவேன், நடிப்பேன்னு சொன்னேன். உடனே அவர், நாளைக்கி காலைல என்னோட ராஜ்கமல் பிலிம்ஸ் ஆபீசுக்குப் போ. அங்கே டி.என்.எஸ்.னு இருப்பாரு. அவர் அட்வான்ஸ் தருவாரு. வாங்கிக்கோ. என் சொந்தப்படத்துல, தேவர்மகன்ங்கற படத்துல நீ நடிக்கிறேன்னார். ரொம்ப நன்றி சார் என்று சொன்னேன்.

ஐயாயிரம் ரூபாய் செக்
என்னை மறுநாள்தான் போகச் சொன்னார். ஆனால் அந்த கேப்ல வேற எவனாவது புகுந்துட்டா என்ன பண்றது? அதனால ஷூட்டிங் முடிஞ்ச கையோட, மாலை ஆறு மணிக்கெல்லாம் நேராக ராஜ்கமல் அலுவலகம் போய்விட்டேன். அங்கே டி.என்.எஸ். அவர்களைச் சந்தித்து கமல் சார் சொன்னத சொன்னேன். உங்களை நாளைக்குத்தானே வரச்சொல்லிருந்தாரு கேட்ட அவரு, உடனே கமலுக்கு போன் போட்டு பேசிட்டு எனக்கு ஐயாயிரம் ரூபாய் செக் கொடுத்தார்.
|
நேத்து நைட்டே விடிஞ்சிருச்சு
மறுநாள் கமலுடன் சிங்கார வேலன் ஷூட்டிங். என்ன வடிவேலு, விடிஞ்சதும் போங்கன்னுதானே சொன்னேன். நேத்து நைட்டே போயிட்டீங்கன்னு கேட்டாரு கமல், அதுக்கு எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிருச்சு சார்னு சொன்னேன். அதேபோல், இப்போது இந்த மேடையில் ஏறியிருக்கிறேன். இனி எனக்கு விடிவுகாலம்தான் என்று கூறினார் வடிவேலு.
|
கலகலப்பான பேச்சு
வடிவேலுவின் இந்த பேச்சை ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் ரசித்தனர். வடிவேலுவின் இந்த கலகலப்பான பேச்சு வைரலாகி வருகிறது.