twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படங்களில் நடிக்க வடிவேலுக்கு தடை

    |

    Recommended Video

    வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுக்கும் விஷால்- வீடியோ

    சென்னை: புதிய படங்களில் நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

    வடிவேலு நடித்த 23 ஆம் புலிகேசி திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

    Actor Vadivelu in trouble!

    இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என படத்திற்கு தலைப்பு முடிவு செய்து, படப்பிடிப்புக்கு பிரம்மாண்ட செட் போடப்பட்டது. அப்போது படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார்.

    வடிவேலுவின் இந்த நடவடிக்கையால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து விளக்கம் கேட்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பதிலளித்த வடிவேலு, டிசம்பர் 2016 க்குள் படத்தை முடிக்கவேண்டும், அதனால் வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகாதீர்கள் என தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் 2016 டிசம்பர் வரை படப்பிடிப்பை தொடங்காமல் இழுத்தடித்த பிறகும்கூட, தொழிலாளர்களின் நலன் கருதி நடித்து கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

    மேலும், தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரை மாற்றியதோடு, பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்ததாகவும், அவர்களின் தாமதத்தால் 2016-17 ஆண்டுகளில் வந்த மற்ற படங்களில் நடிக்க முடியாமல் போய் பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு நடித்துக்கொடுக்க வில்லை என்றால் 2016 ஆம் ஆண்டே ஏன் அவர்கள் புகார் கொடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில், படத்திற்கு செலவழித்த தொகையை திருப்பி கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கூறியதற்கு வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் 24ஆம் புலிகேசி பட பிரச்சனை முடியும் வரை எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

    English summary
    South Indian Producer council instructed producers to not offer movie for Vadivelu until 24aam Pulikesi issue gets completed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X