Just In
- 7 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 7 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 8 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 9 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆன்மீகமும் அன்பும் இருக்கு.. நிச்சயம் கொரோனா வராது.. வையாபுரி டிப்ஸ்!
சென்னை : நடிகர் வையாபுரி கொரோனா பற்றிய விழிப்புணர்வு காணொலி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் வையாபுரி தமிழ் சினிமா ரசிகர்களால் சிறந்த குணசித்திர நடிகராக அறியபட்டவர். இவர் அதிகபடியான காமெடி கதாபாத்திரங்களை எடுத்து நடித்தவர். சிறந்த நகைச்சுவை நாயகனாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர். நடிகர் வையாபுரியும் மற்ற நடிகர்களை போல கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசிய காணொலி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த காணொலியில் நடிகர் வையாபுரி நாம் ஆன்மீகமும் அன்பும் நிறைந்த மக்களாக இருக்கிறோம் இதனால் நமக்கு கட்டாயம் கொரோனா தொற்று பரவாது என கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது இதனால் யாரும் பயப்பட தேவையில்லை நம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார் .

மேலும் நாம் சுத்தம் நிறைந்த மக்கள் நமக்கு இந்த நோய் அடிப்படையில் வராது இருந்தும் நமது ஊர்களில் கடைகள் அனைத்திலும் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை என்று தைரியமாக கூறியுள்ளார் .

நம் பண்பாடை பின்பற்றி அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவியுங்கள் . இதை போல பல விஷயங்களை முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள். உதராணத்திற்கு நம் முன்னோர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டு வந்தால் வீட்டுக்குள் வரும் போது கை கால் கழுவி விட்டு தான் உள்ளே வர சொல்வார்கள். அதை நாம் தற்போது தவறாமல் பின் பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த காணொலியில் மேலும் சில இயற்கையான அறிவுரைகளை கூறியுள்ள வையாபுரி குழந்தைகளுக்கு காலையும் இரவும் உப்பு போட்டு வாய் கொப்பிளிக்க அறிவுரை கூறியுள்ளார். மேலும், இதே நேரத்தில் நாம் இஞ்சி , கடுகு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டு இருப்பது நன்று இருந்தும் எல்லோரும் சொல்கிறார்கள் என்று ஒரே அடியாக அறைத்து குடிக்காதீர்கள் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இறுதியாக பல வதந்திகள் வாட்சாப்பில் பரவி வருகிறது அனைத்தையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் ரங்கநாதன் தெரு காலியாக இருக்கிறது அதை பார்க்க சில கூட்டம் கூடுகிறது. அதை பார்க்க செல்கிறோம் என எதிலும் மாட்டிகொள்ளாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார்.
