»   »  காணாமல் போன அம்மாவை தேடும் பிரபல நடிகர்!

காணாமல் போன அம்மாவை தேடும் பிரபல நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'கிழக்குச் சீமையிலே' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் விக்னேஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தன் தாயாரை தற்போதும் தேடி வருகிறாராம். அவரைப் பிரிந்து வாடுவதாகத் தெரிவித்துள்ளார் விக்னேஷ்.

நடிகர் விக்னேஷ் 'கிழக்குச் சீமையிலே', 'பசும்பொன்' உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர். பாலாவின் நண்பரான இவர் 'சேது' படத்தில் அறிமுகமாகவிருந்து பிறகு நடிக்கவில்லை.

Actor vignesh searching her missing mom

இதற்கிடையே சில படங்களையும் தயாரித்து நஷ்டமடைந்தார். இதனால் அவருடைய குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது பிரச்னை முடிவுக்கவவந்துவிட்டது. தற்போது மீண்டும் விக்னேஷ், பா.விஜய் இயக்கத்தில் 'ஆருத்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விக்னேஷின் தாயார் காணாமல் போய்விட்டாராம். அவரைத் தற்போது தேடி அலைந்து வருகிறாராம் விக்னேஷ். அவரை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என ஆவலோடு இருந்து வருகிறார்.

விக்னேஷ் தற்போது தனது மனைவியுடன் இணைந்து கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தையும், சில ஹாஸ்டல்களையும் நடத்தி வருகிறார். மீண்டும் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடிப்பேன் எனக் கூறி வருகிறார் விக்னேஷ்.

English summary
Actor Vignesh, who acted in the movie 'Kizhakku Seemaiyile' is now searching his missing mom. A few years ago Vignesh's mother had gone missing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X