»   »  கோடி கொடுத்தாலும் ஜோடி அமையுமா பாஸ்.. ட்விட்டரில் அதிரடி வாழ்த்துக்களை பதிவிடும் விஜய் ரசிகர்கள்

கோடி கொடுத்தாலும் ஜோடி அமையுமா பாஸ்.. ட்விட்டரில் அதிரடி வாழ்த்துக்களை பதிவிடும் விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1999 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25 ம் தேதி சங்கீதாவை திருமணம் செய்து மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய், இந்த 2015 ல் 16 வது திருமண வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இன்று விடியும் போதே புலி திரைப்படம் தள்ளிப் போய்விட்டது என்ற துக்க செய்தி காதுகளில் இடியாய் இறங்க, அந்த வருத்தத்தையும் மீறி விஜயின் 16 வது திருமண ஆண்டை #HappyWeddingAnnivMrandMrsVijay என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி வலைதளங்களில் சீரும் சிறப்புமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இதில் ரசிகர்கள் பலரும் விஜயின் பல அரிய புகைப்படங்களை போஸ்ட் செய்து தங்கள் திருமண வாழ்த்துக்களைக் கூறியிருக்கின்றனர். அந்த புகைப்படங்களில் இருந்து சிலவற்றை இங்கே காணலாம்.

திருமண அழைப்பிதழ்

விஜயின் திருமண அழைப்பிதழை போஸ்ட் செய்து விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் லோகேஷ்.

பத்ரி பாடல் வரிகள்

பத்ரி படத்தில் இடம்பெற்ற கலகலக்குது பாடலின் வரிகளை போஸ்ட் செய்து விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் மனோஜ்.

நண்பன் சூர்யா

விஜயின் சிறந்த நண்பரான சூர்யா விஜய் திருமணத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்த போட்டோவைப் பதிவிட்டு விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் சேகர்.

காதலோடு வேதங்கள் 5 என்று சொல்லுங்கள்

பூவே உனக்காக படத்தில் இடம்பெற்ற ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடலின் வரிகளை போஸ்ட் செய்து விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் ரவிஷா.

விஜயின் திருமணம்

விஜய் சங்கீதா கழுத்தில் தாலி கட்டும் போட்டோவைப் பதிவிட்டு விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் செல்வா.

விஜய் - அஜீத்

விஜயின் திருமணத்திற்கு அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாழ்த்தியதை பதிவிட்டு விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் சங்கர் நரேஷ்.

கோடி கொடுத்தாலும் ஜோடி அமையாது பாஸ்

எத்தனை கோடி கொடுத்தாலும் இப்படி ஒரு ஜோடி அமையுமா என்பது சந்தேகம் தான், மணவாழ்வில் சரியான ஜோடியாகத் திகழும் விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு எனது மனப்பூர்வமான திருமண நாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் அனிவ்.

English summary
Today Actor Vijay Celebrating His 16th Anniversary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil