பிரபல நடிகருடன் டின்னர் டேட்டிங் போன நடிகை ராஷ்மிகா மந்தனா.. இணையத்தில் லீக்கான ரகசிய போட்டோஸ்!
மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகருடன் இரவில் டின்னர் டேட்டிங் போன போட்டோக்கள் இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தில் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்தார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் ஹிட் படங்களை கொடுத்ததன் எதிரொளியாக தெலுங்கு, தமிழ் மற்றும் பாலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ராஷ்மிகா மந்தனா.

கார்த்திக்கு ஜோடி
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன் மூலம் தமிழ் சினிமாவில் பரிட்சயமானார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

வேற லெவல் கெமிஸ்ட்ரி
நடிகை ராஷ்மிகா மந்தனா 2018ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் பக்காவாக கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது. இதனை தொடர்ந்து டியர் கம்ரெட் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தனர் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும். இதிலும் அவர்களின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் வேலை செய்தது.

வலுத்த காதல் கிசுகிசு
இதனை தொடர்ந்து இருவரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்த மெஸேஜ்களை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் காதலா என பதிவிட்டு வந்தனர். ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு விஜய் தேவரகொண்டாவும் கிஃப்ட்களை அனுப்பி வைத்தார். இதனால் இருவருக்கும் இடையிலானகாதல் கிசுகிசு வலுத்தது.

மீண்டும் கிளம்பிய பேச்சு
ஆனால் காலப் போக்கில் அந்த பேச்சு அப்படியே அடங்கிவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக மீண்டும் பேச்சு கிளம்பியது. அதற்கு காரணம் அவர்கள் இருவரும் ஜிம்மில் ஒன்றாக வொர்க்கவுட் செய்த போட்டோக்கள் தான்.

ஒன்றாக ஒர்க் அவுட்
பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை சென்ற ராஷ்மிகா அடிக்கடி ஜிம்மிற்கு சென்று ஒர்க் அவுட் செய்து வந்தார். அந்த நேரம் மும்பையில் இருந்த விஜய்யும் ராஷ்மிகா சென்ற அதே ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தார். இதனை தொடர்ந்து ஹைதராபாத் திரும்பிய இருவரும் ஒரே ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

லீக்கான டேட்டிங் போட்டோஸ்
இதனால் காதல் கிசுகிசு பேச்சு மேலும் தீவிரமானது. ஆனால் இதனை மறுத்த ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா தனக்கு நண்பர்தான் என்று கூறிவந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவர்களின் சில போட்டோக்கள் அவர்களுக்கு இடையிலான காதல் கிசுகிசு நெருப்பில் பெட்ரோலை ஊற்றியுள்ளது.

ஹோட்டலில் டின்னர் டேட்டிங்
அதாவது இருவரும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு டின்னர் டேட்டிங் சென்றுள்ளனர். ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அவர்கள் இருவரும் கேமராக்களின் கண்களில் சிக்கியுள்ளனர். இதில் ராஷ்மிகா மந்தனா கறுப்பு நிற உடை மற்றும் மாஸ்க் அணிந்து கையில் ஹேண்ட் பேக்குடன் உள்ளார். விஜய் தேவரகொண்டா அனிமல் பிரிண்டட் ஷர்ட் கறுப்பு பேண்ட், வெள்ளை நிற ஷூ அணிந்துள்ளார்.

பாலிவுட் ஜோடியே தோற்றுவிடும்
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் தென்னிந்திய ஜோடியான இந்த ஜோடிக்கு முன்பு ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடியே தோற்றுவிடும் என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் கிரஷ்மிதா அன்ட் லவ் கொண்டா என்றும் இருவரையும் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video

கன்னட நடிகருடன் டேட்டிங்
ரியாக்ஷன் குயின் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் ராஷ்மிகா மந்தனா, ஏற்கனவே கிரிக் பார்ட்டி நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் காதல் உறவில் இருந்தார். இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் போட்டோக்கள் வெளியாகி வந்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











