Don't Miss!
- News
சுதந்திர தினம்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி வீடியோ.. புதிய சாதனை!
- Finance
ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் ஷாக்..!
- Automobiles
ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!
- Sports
சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த ஷிகர் தவான்.. முதல் குறியே கேஎல் ராகுல்.. கேப்டன் பதவியால் கோபம்?
- Lifestyle
சாமை கட்லெட்
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
உணர்ச்சிவசப்பட்ட ரசிகை.. கட்டிப்பிடித்து தேற்றிய விஜய் தேவரகொண்டா.. எதுக்காக தெரியுமா?
ஐதராபாத் : நடிகர் விஜய் தேவரகொண்டா தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
இவரது அர்ஜூன் ரெட்டி படம் இவருக்கு ஏராளமா ரசிகைகளை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தற்போது லிகர் படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
95
நாட்களாக
அப்பாவிடம்
பேசாத
மகள்..
நைனிகாவின்
பரிதாப
நிலை
குறித்து
பிரபலங்கள்
உருக்கம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி இவருக்கு அதிகமான பெண் ரசிகைகளை பெற்றுத் தந்தது. தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் இவரது படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பான அர்ஜூன் ரெட்டி
அர்ஜூன் ரெட்டி படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, டியர் காமரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. தொடர்ந்து அடுத்ததாக இவர் நடித்து முடித்துள்ள லிகர் படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.

எம்எம்ஏ பைட்டர்
இந்தப் படத்தில் எம்எம்ஏ பைட்டராக நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இதற்காக சிறப்பான வகையில் தன்னுடைய உடலை ஏற்றியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரில் நிர்வாணமாக காணப்படும் விஜய் தேவரகொண்டா, கையில் பூங்கொத்தை வைத்துள்ளதாக காணப்படுகிறது.

ரசிகையின் சர்ப்பிரைஸ்
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகை ஒருவர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். முதலில் விஜய் தேவரகொண்டாவை தன்னுடைய தோழியுடன் சந்தித்த அந்த ரசிகை பேச்சின்றி ஆனந்த கண்ணீர் விட்டார். இதையடுத்து அவரைக் கட்டித்தழுவி அவருக்கு ஆறுதல் தெரிவித்தார் விஜய் தேவரகொண்டா.

ரசிகை முதுகில் டாட்டூ
தொடர்ந்து அவருக்கு தன்னுடைய முதுகில் இருந்த விஜய் தேவரகொண்டாவின் லிகர் பட லுக் டாட்டூவை அந்த ரசிகை காட்டினார். இதனால் விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சிக்கு உள்ளானார். இதற்கும் மேலாக அந்த இரு ரசிகைகளும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையை சேர்ந்த இவர்கள் விஜய் தேவரகொண்டாவை பார்க்க ஐதராபாத் வந்துள்ளனர்.

வெறித்தனமான ரசிகைகள்
விஜய் தேவரகொண்டா தன்னுடைய படங்களின்மூலம் இத்தகைய வெறித்தனமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தை லிகர் படக்குழுவினர் வீடியோவாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது தங்களுக்கு பிடித்த நடிகர்களின் முகங்களை டாட்டூவாக போடுவது ட்ரெண்டாகி வருகிறது.