»   »  பறக்கும் பந்து பறக்கும்... படக்குழுவினருடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடிய விஜய்!

பறக்கும் பந்து பறக்கும்... படக்குழுவினருடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடிய விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இப்பட படப்பிடிப்பின் போது, அவர் படக்குழுவினருடன் பேட்மிண்டன் விளையாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Actor Vijay and Director Atlee Plays Badminton

புலி படத்தைத் தொடர்ந்து, இன்னமும் பெயரிடப்படாத தனது 59வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அட்லி இயக்கி வரும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர்.

கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அடை மழையிலும் சென்னையில் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் படப்பிடிப்பின் இடைவேளையில் கிடைத்த நேரத்தில், இயக்குநர் அட்லி மற்றும் படக்குழுவினருடன் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார் விஜய்.

இவ்வளவு பெரிய நடிகர், மிகவும் எளிமையாக படக்குழுவினருடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடியது படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

English summary
Actor Vijay played Badminton with director Atlee in the shooting of his 59th movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil