twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கு முடித்து வைப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு என்ன தெரியுமா?

    |

    சென்னை: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

    Recommended Video

    நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில் அபராதம் வசூலிக்க தடை

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்தாத வழக்கு முன்னதாக நடைபெற்று பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது மற்றொரு சொகுசு காரான பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கான நுழைவு வரி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கையும் முடித்து வைத்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

    விஜய் கார் வழக்கு

    விஜய் கார் வழக்கு

    நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்களுக்கு முறையான நுழைவு வரி செலுத்தவில்லை என ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் வழக்கு பெரிதும் பரபரப்பை கிளப்பியது. நடிகர் விஜய்யை தேச விரோதியாக சித்தரித்தது தவறு என்றும் அவருக்கு சாதகமான தீர்ப்புகள் வெளியாகின.

    BMW X5

    BMW X5

    கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து
    இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதன் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

    அதிக அபராதம்

    அதிக அபராதம்

    பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால், விஜய் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக வரித்துறை கோரிக்கை வைத்திருந்தது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    வணிக வரித்துறை மற்றும் நடிகர் விஜய் தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சொகுசு கார் நுழைவு வரி வழக்கில் அபராதம் விதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்றும், நுழைவு வரியை முழுமையாக செலுத்தாவிட்டால் அபராதம் வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    வரி செலுத்திவிட்டார்

    வரி செலுத்திவிட்டார்

    காருக்கு 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்ட நிலையில் இடைப்பட்ட காலத்திற்கு 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது. 2 சதவிகிதம் வரி விதிப்பதற்குப் பதிலாக 400 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வணிகவரித்துறையின் வரிவிதிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சொகுசு கார் வழக்கையும் முடித்து வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

    English summary
    Actor Vijay luxury car case judgement arrived now after Chennai High Court announced. Actor wish to avoid additional charges in this case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X