வாரிசு படத்தை ஓடிடியில் வெளியிடுங்க.. ட்விட்டரில் ட்ரெண்டான கோரிக்கை!

சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது அவர் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதியிலேயே அவர் தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

வாரிசு படம் வழக்கமான விஜய்யின் மாஸ் படங்களில் இருந்து விலகி குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்


நடிகர் விஜய் -நெல்சன் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியானது பீஸ்ட். தனது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் சொதப்பலான முடிவுகளையே அவர் கொடுத்தார்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

மிகுந்த எதிர்பார்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் மிகுந்த ட்ரோல்களை சந்தித்தது. மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் பீஸ்ட் படத்தை கலாய்த்து தள்ளினர். அதன் ஒவ்வொரு காட்சிகளும் விமர்சனங்களுக்கு உள்ளானது. கலவையான விமர்சனங்களை படம் பெற்றது.

சிறப்பான வசூல்

சிறப்பான வசூல்

ஆனாலும் சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபிசில் படம் சிறப்பான வசூலை பெற்றது. இதனிடையே நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அவரது மாஸ் படமாக வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது அவர் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

வாரிசு படம்

வாரிசு படம்

பிரபல இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் தெலுங்கிலும் வாரிசுடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை சர்வதேச அளவில் 5வது இடத்தில் ட்ரெண்டாகியது.

விற்றுத் தீர்ந்த உரிமைகள்

விற்றுத் தீர்ந்த உரிமைகள்

வழக்கமான விஜய்யின் படங்களை போலவே வாரிசு படமும் சிறப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. முன்னதாக டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியானதோடு சரி. இந்தப் படத்தின் டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகளும் 150 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X