காற்றாலையில் சிக்கிக் கொண்ட பரத், வாணிபோஜன்… அடுத்தது என்ன?: நெஞ்சை உறைய வைக்கும் மிரள் டீசர்
சென்னை: பரத் நடிப்பில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள மிரள் படத்தை சக்திவேல் இயக்கியுள்ளார்.
பரத்துடன் வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மிரள் படத்தின் ரிலீஸ் பற்றி படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், மிரள் படத்தின் மிரட்டலான டீசரை விஜய் சேதுபதியும், வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

கம்பேக் கொடுக்க காத்திருக்கும் பரத்
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களில் ஒருவராக அறீமுகமானவர் பரத். 2003ல் வெளியான இந்தப் படம் பரத்துக்கு சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது. அதன்பிறகு ஷங்கர் தயாரிப்பில் காதல், வெயில் படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்தார். அதன்பிறகு எம்டன் மகன் படத்திலும் பரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு அவருக்கு சரியான வெற்றிப் படங்கள் கிடைக்காத நிலையில், தற்போது 'மிரள்' படத்தில் நடித்துள்ளார்.

மிரள் இல்லை மிரட்டல்
பாலிவுட்டில் சல்மான் கானுடன் ராதே, மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் குரூப் ஆகிய படங்களில் நடித்த பரத், தமிழில் மிரள் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மரகத நாணயம், ராட்சசன், பேச்சுலர் என வித்தியாசமான படங்களை தயாரித்துள்ள ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி, 'மிரள்' படத்தையும் தயாரித்துள்ளது. சக்திவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பரத்துடன் வாணி போஜனும் நடித்துள்ளார். ஏற்கனவே மிரள் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்போது டீசரும் படுமிரட்டலாக வெளியாகியுள்ளது. .

விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு வெளியிட்ட டீசர்
மிரள் படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவர்களது டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர். ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மனைவி வாணிபோஜன், மகனுடன் சொந்த ஊர் செல்கிறார் பரத். அங்கே அவரது அப்பா கேஎஸ் ரவிக்குமாரும் அம்மாவும் வசித்து வரும் வீட்டில் சில திகிலான சம்பவங்கள் நடக்கின்றனா.

காற்றாலையில் சிக்கிக்கொள்ளும் குடும்பம்
பின்னர் ப்ராஜக்ட் விசயமாக அங்கிருந்து பரத்தும், வாணிபோஜனும் அவசரமாக காரில் கிளம்புகின்றனர். அர்த்த ராத்திரியில் அந்த கிராமத்தில் இருந்து புறப்படும் பரத், தனது குடும்பத்தினருடன் ஒரு காற்றாலையில் சிக்கிக் கொள்கிறார். மணிஹெய்ஸ்ட் வெப் சீரிசில் வரும் முகமூடியைப் போல வெள்ளை நிற முகமூடி அணிந்த சில அமானுஷ்ய உருவங்கள் அவர்களை துரத்துவதாக இந்த டீசர் உருவாகியுள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆவலுடன் டீசர் நிறைவடைந்துள்ளது. ஆனந்தபுரத்து வீடு படத்தை நினைவுப்படுத்துவதைப் போல இருந்தாலும், நெஞ்சை உறைய வைக்கிறது மிரள் டீசர். இந்தப் படம் நவம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











