முதல் முறையாக கமலுடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி.. நனவான கனவு.. தரமான சம்பவம் லோடிங்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி விக்ரம் படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், நகைச்சுவை என எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்றாலும் பின்னி பெடலெடுத்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி எனவும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. அவரது எதார்த்தமான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் அவரை பின் தொடர்ந்து வருகிறது.

ரஜினிக்கு வில்லன்

ரஜினிக்கு வில்லன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. இதில் அவரது பர்ஃபாமன்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக தொடர்ந்தார்.

பவானி கேரக்டரில் மிரட்டல்

பவானி கேரக்டரில் மிரட்டல்

மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டரில் மிரட்டல் வில்லனாக அலறவிட்டார் விஜய் சேதுபதி. இதனை தொடர்ந்து தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்திலும் வில்லனாக நடித்தார் நடிகர் விஜய் சேதுபதி.

நடிப்பு அசுரன் கமல்

நடிப்பு அசுரன் கமல்

இதில் ராயனம் என்ற கேரக்டரில் மிரட்டியிருந்தார். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலேயும் பல படங்களை கை வசம் வைத்து கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. ஆனால் நடிப்பு அசுரனான கமல்ஹாசனுடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை விஜய் சேதுபதி.

வாய்ப்புத் தாருங்கள்

வாய்ப்புத் தாருங்கள்

இது பெரும் குறையாக இருந்தது விஜய் சேதுபதிக்கு. கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி இந்தியன் 2 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சில காரணங்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் உங்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும், எனக்கு வாய்ப்புத் தாருங்கள் என கமலிடம் வெளிப்படையாக கேட்டார்.

விக்ரம் படத்தில்

விக்ரம் படத்தில்

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கமலின் அடுத்த படத்தில் படத்தில் நடிக்க உள்ளதாக அரசல்புரசலாக தகவல் வெளியானது. அதன்பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல் பரவியது.

விஜய் சேதுபதிக்கு பதில்

விஜய் சேதுபதிக்கு பதில்

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே கால் ஷீட் பிரச்சனையால் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும் விஜய் சேதுபதிக்கு பதில் ஃபகத் ஃபாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்பட்டது.

உறுதிப்படுத்திய ஃபர்ஸ்ட் லுக்

உறுதிப்படுத்திய ஃபர்ஸ்ட் லுக்

இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் குழப்பமும் கவலையும் அடைந்தனர். இந்நிலையில் இன்று வெளியான விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதியும் ஃபகத் ஃபாசிலும் நடிப்பது உறுதியாகியுள்ளது.

நனவான கனவு

நனவான கனவு

இதன் மூலம் நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற விஜய் சேதுபதியின் கனவு நனவாகியுள்ளது. விஜய் சேதுபதியின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் எப்படியானதாக இருக்கும் வில்லனா? ஹீரோவா என்றும் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X