twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    90களில் இருந்தே எனக்கு அந்த நடிகர் தான் போட்டி.. வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

    |

    சென்னை: "என் நெஞ்சில் குடியிருக்கும்" என மைக்கை பிடித்து நடிகர் விஜய் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேச ஆரம்பித்ததும் அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய வணக்கத்தை வைத்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார் நடிகர் விஜய்.

    தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரபு, குஷ்பு, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் வாரிசு.

    வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியாக உள்ளது. அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு பல ஆண்டுகள் கழித்து நேரடியாக மோத உள்ளன.

    எத்தனை அரசியல் வாரிசுகள் வந்தாலும்..SAC-யோட வாரிசு கிட்ட நெருங்க முடியாது..போஸ்டரால் பரபரப்பு!எத்தனை அரசியல் வாரிசுகள் வந்தாலும்..SAC-யோட வாரிசு கிட்ட நெருங்க முடியாது..போஸ்டரால் பரபரப்பு!

    விஜய் பேச்சு

    விஜய் பேச்சு

    வம்சி சொன்ன கதையை ஒரு தடவ கேட்டாலே ஓகே சொல்லிடுவாங்க... நம்ம நண்பா நண்பிகள் எல்லாரும் ஒரு குடும்பம் மாதிரி தான் அவங்களுக்காகத்தான் இந்த படம். பாடலாசிரியர் விவேக்குள்ளே ஒரு இயக்குநர் இருக்கிறார். அதை இனி பார்ப்பீர்கள். தமன் புல்லாங்குழல் வைத்து கூட டிரம்ஸ் வாசிப்பார். அது போன்று பாடல்களுக்கு பீட் போட்டு வைத்திருக்கிறார்.

    செல்லம்னா முத்துப்பாண்டி

    செல்லம்னா முத்துப்பாண்டி

    வில்லன்னு சொன்னா நிறைய பேரோட பேரு மைண்ட்டுக்கு வரும். ஆனா, செல்லம்னு சொன்னா 'முத்துப்பாண்டி' பிரகாஷ்ராஜ் மட்டும்தான் ஞாபகம் வருவாரு. கில்லி, சிவகாசி யைத் தொடர்ந்து இந்த படத்திலும் பிரகாஷ் ராஜ் உடனான கூட்டணி தொடர்ந்துள்ளது என விஜய் பேசினார்.

    குஷ்பு மேமை பார்த்தால்

    குஷ்பு மேமை பார்த்தால்

    கமலா தியேட்டரில் சின்ன தம்பி படத்தை கேர்ள் பிரண்ட் உடன் போய் பார்த்த ஞாபகம் தான் குஷ்பூ மேமை பார்த்தாலே வருகிறது என நடிகர் விஜய் தனது பழைய நினைவுகளை அசை போட்டதும் ஒட்டுமொத்த அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்ததது.

    ரத்தத்துக்கு மட்டும்தான்

    ரத்தத்துக்கு மட்டும்தான்

    ரத்தத்துக்கு மட்டும்தான் ஏழை பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி ரொம்ப முக்கியமா எந்த மதம்னு தெரியவே தெரியாது. ரத்தத்துக்கு எந்தப் பிரிவினையும் கிடையாது. மனுசங்கதான் எல்லா பிரிவினையையும் பார்க்குறோம். ரத்தத்துக்கிட்ட இருந்து அந்த தன்மையை நாம கத்துக்கணும். அதனாலதான் ரத்ததானத்தை ரசிகர்கள் மூலமா ஊக்குவிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கிறப்பல்லாம் நன்றி சொல்லிக்கிட்டே இருக்கணும். என்னை உருவாக்கிய உளிகளான ரசிகர்களுக்கு நன்றி என்றார் விஜய்.

    குட்டி ஸ்டோரி

    குட்டி ஸ்டோரி

    1990களில் ஒரு போட்டியாளர் என்னை நோக்கிப் பார்த்தார். அதன் பின்னர், நான் எங்கே போனாலும் என்னை பின் தொடர்ந்தார். நான் அவரை பார்த்து விட்டு அவரை விட முன்னேறணும்னு ஓடினேன். நமக்கு எப்போதுமே ஒரு போட்டியாளர் வேண்டும்.. அந்த போட்டியாளர் என்னுடன் போட்டி போட ஆரம்பிச்சது 1992ல அவர் பெயர் ஜோசப் விஜய்.. உங்களுக்கு நீங்க தான் காம்பெடிட்டர் நண்பா.. உங்களை நீங்க வெல்லணும்னு முயற்சி செய்யுங்க என நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தன்னை பற்றிய சூப்பர் குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

    அரசியல் பேச்சு இல்லை

    அரசியல் பேச்சு இல்லை


    வாரிசு படத்தை சுற்றியும் நடிகர் விஜய்யை சுற்றியும் ஏகப்பட்ட அரசியல் சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருந்த நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக நடிகர் விஜய் எந்தவொரு கருத்தையும் முன் வைத்து பேசவில்லை. எதிர்ப்புகள் தான் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என்று மட்டுமே கூறியிருந்தார்.

    செல்ஃபி வீடியோ

    கடைசியாக ரசிகர்களுக்காக மேடையில் ரஞ்சிதமே பாடலை எல்லாம் பாடி முடித்த நடிகர் விஜய் ஒட்டுமொத்த கூட்டத்தையும் சேர்த்து செல்ஃபி வீடியோவாக எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொகுப்பாளர்களான ராஜு ஜெயமோகன் மற்றும் விஜே ரம்யா விஜய்க்கு மிகவும் அருகே அந்த செல்ஃபி வீடியோவில் இருந்தனர்.

    English summary
    Actor Vijay tells heart touching Kutty Story at Varisu Audio Launch makes his fans very happy. He motivate all of them with self competition. Vijay's Varisu audio launch finished like a most memorable event of 2022.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X