தெலுங்கு ஆடியன்சை கவர விஜய் எடுத்த அதிரடி முடிவு..இந்த பிளான் கைகொடுக்குமா?

சென்னை : வாரிசு படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாக உள்ள நடிகர் விஜய் தெலுங்கு ஆடியன்சை கவர பக்காவாக பிளான் போட்டுள்ளார்.

வாரிசு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்திலும் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் பணியாற்றி வருகிறார் விஜய். அவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குநரும், தமிழில் தோழா படத்தை இயக்கியவருமான வம்சி தான் இப்படத்தை இயக்குகிறார்.

வாரிசு

வாரிசு

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. இதேபோல் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

வெளியான வீடியோ

வெளியான வீடியோ

வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று, மருத்துவமனையில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது எடுத்த வீடியோ காட்சி கசிந்துள்ளது. அதில் நடிகர் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து பதறியபடி ஓடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

Recommended Video

Aditi Shankar பெரிய நடிகையா வருவாங்க | Actor Soori Speech
தெலுங்கு ஆடியன்சை கவர

தெலுங்கு ஆடியன்சை கவர

இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு இல்லாததால் ஓய்வாக இருந்த நடிகர் விஜய், ஹைதராபாத்தில் மகேஷ் பாபு நடத்தும் தியேட்டரில் நந்தமுரி கல்யாண் ராம் நடித்த 'பிம்பிசாரா' படத்தை பார்த்துள்ளார். திரையரங்கில் இருந்து வெளியே வந்த விஜய காருக்குள் ஏறும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வாரிசு தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ள படம் என்பதால், விஜய் தெலுங்கு ஆடியன்சை கவர திட்டமிட்டு தெலுங்கு திரைப்படத்தை பார்த்து வருகிறார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X