விக்ரமின் தங்கலான்.. விரைவில் கேஜிஎப் பயணமாகும் படக்குழு!

சென்னை : நடிகர் விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் படம் விக்ரமிற்கு சிறப்பான வரவேற்பை பெற்று தந்தது.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரமின் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான கோப்ரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில் கெட்டப்புக்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை கதைக்குக் கொடுக்க இயக்குநர் தவறியதாக விமர்சனங்கள் எழுந்தன.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியானது. இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கேரக்டரை ஏற்று நடித்த விக்ரம், சிறப்பான விமர்சனங்களையும் பெற்றிருந்தார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தங்கலான் படத்தில் விக்ரம்

தங்கலான் படத்தில் விக்ரம்

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாகி வருகிறது. பீரியட் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரமை பார்க்க முடிகிறது. படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாகியுள்ளார்.

கேஜிஎப் செல்லும் படக்குழு

கேஜிஎப் செல்லும் படக்குழு

இந்தப் படத்தில் விக்ரம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் அதிகமான காட்சிகளை சென்னையில் எடுத்து முடித்துள்ளார் பா ரஞ்சித். தொடர்ந்து தற்போது சென்னையில் மாளவிகாவின் போர்ஷன்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இடையில் சிறிது இடைவெளி எடுக்கவுள்ள படக்குழு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக கேஜிஎப் செல்லவுள்ளது.

 கேஜிஎப் மக்களின் வாழ்க்கை

கேஜிஎப் மக்களின் வாழ்க்கை

இங்கு விக்ரம் மற்றும் பசுபதி இடம்பெறவுள்ள காட்சிகளை எடுக்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். படத்தின் மொத்த சூட்டிங்கையும் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க பா ரஞ்சித் திட்டமிட்டு, அதற்கேற்ப படத்தின் சூட்டிங்கை முடுக்கி விட்டுள்ளார். கேஜிஎப் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மையமாக கொண்டு வித்தியாசமான திரைக்கதையுடன் இந்தப் படம் மக்களை சந்திக்க உள்ளது.

சிறப்பான கெட்டப்புகள்

சிறப்பான கெட்டப்புகள்

தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் தன்னுடைய கேரக்டர்களுக்கு உயிர் கொடுப்பவர் விக்ரம். இவரது படங்கள் அனைத்தும் இவரது சிறப்பான கெட்டப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதேபோல தங்கலான் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X