»   »  அமெரிக்காவில் ரசிகர்களை இன்சல்ட் செய்தாரா விக்ரம்?

அமெரிக்காவில் ரசிகர்களை இன்சல்ட் செய்தாரா விக்ரம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நடிகர் விக்ரமால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம், அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தாரா அல்லது இடைவிடாது தொலைப்பேசியில் பேச வந்தாரா என தெரியவில்லை என்று அமெரிக்க தமிழ் சங்க தலைவர் பிரகாஷ் எம் சுவாமி என்பவர் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, நியூயார்க்கில் நகரத்தில் இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 36வது இந்திய பரேடு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் பாலிவுட் ஸ்டார் அபிஷேக் பச்சன், பிரியங்கா கோதரி, கோலிவுட் ஸ்டார் சியான் விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அபிஷேக் பச்சன் தலைமை தாங்கினார். கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, நடிகர் விக்ரம் அங்கு கூடியிருந்தவர்களிடம் வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தமிழ் சங்க தலைவர் பிரகாஷ் எம் சுவாமி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "நடிகர் விக்ரமால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம், அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தாரா அல்லது இடைவிடாது தொலைப்பேசியில் பேச வந்தாரா என தெரியவில்லை.

விழாவில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம் அன்பாகவும், பிரியமாகவும் நடந்து கொண்டதோடு, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். ஆனால் விக்ரமோ வாணத்தில் இருந்து குதித்தவர் போல நடந்து கொண்டார்.

இதற்கு முன் இந்த விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், சரத்குமார், ராதிகா ஆகிய திரைப்பட பிரபலங்கள் மக்களிடம் எளிதாக நடந்து கொண்டனர். எவ்வளவு கூட்டம் சரத்குமாரை சூழ்ந்து கொண்ட போதும் அவர்கள் மீது எந்த வித வெறுப்பும் காட்டமல் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அன்பாக பழகினார்கள். ஆனால் விக்ரமை 30, 40 பேர் சூழ்ந்து கொண்டதற்கே திமிராக நடந்து கொண்டார். உங்களை அழைத்ததற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்" என தெரிவித்திருந்தார் பிரகாஷ் எம்.சுவாமி. இந்த பதிவுக்கு கண்டனங்கள் எழவே அதனை அவர் நீக்கிவிட்டார்

பொய் சொல்கிறார் பிரகாஷ்

இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறியுள்ள விக்ரம் மேலாளர் , விக்ரமுக்கு அழைப்பு விடுத்தது பெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோஷியேசன் என்ற அமைப்பு தான், தனிமனிதர் அல்ல. விழாவில் என்ன நடந்தது என்பது அங்கு இருந்தவர்களுக்கு தெரியும், மேலும் நிகழ்ச்சி சிறப்பாகவும் நடைபெற்றது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்" என தெரிவித்துள்ளார். அமெரிக்க ரசிகர் ஒருவரும் விக்ரம் பங்கேற்ற நிகழ்ச்சியின் உண்மை நிலவரத்தினை பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் கொதிப்பு

விக்ரம் யார் என்பதை இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அவரது ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

English summary
A senior journalist has alleged that popular actor Vikram was disrespectful to Indians during his recent trip to New York to attend India Day event. Prakash M Swamy, the US-based Indian journalist, has come out a lengthy post on his Facebook page this morning, hitting out at Vikram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil