»   »  10 என்றதுக்குள்ள புரோமோஷன்... நஸ்ரியாவின் நடிப்பைப் புகழ்ந்த விக்ரம்

10 என்றதுக்குள்ள புரோமோஷன்... நஸ்ரியாவின் நடிப்பைப் புகழ்ந்த விக்ரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 10 என்றதுக்குள்ள படத்தின் புரோமோஷனுக்காக கேரளா சென்றிருக்கும் நடிகர் விக்ரம், நஸ்ரியாவின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்திருக்கிறார்.

விக்ரம் - சமந்தா நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் படம் 10 என்றதுக்குள்ள. தமிழ்நாடு தவிர கேரளாவிலும் விக்ரமிற்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.

Actor Vikram lauds Nazriya Nazim

இதனால் கேரளா சென்று 10 என்றதுக்குள்ள படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சியில் விக்ரம் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு விக்ரம் பேட்டி அளித்திருக்கிறார்.

90 களில் மலையாளத் திரையுலகில் விக்ரம் பிரபலமாக இருந்தார், அன்று முதல் இன்றுவரை கேரள மக்களின் மீது அவர் கொண்டிருக்கும் அன்பு மற்றும் அவருக்கு பிடித்த மீன் குழம்பு ஆகியன குறித்து அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சமீப மலையாள படங்களில் அறிமுக இயக்குனர் ஜுடே அந்தோணி ஜோசப்பின் ஓம் சாந்தி ஓஸானா திரைப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், குறிப்பாக நஸ்ரியாவின் நடிப்பு தன்னைப் பாதித்ததாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் நஸ்ரியாவின் நடிப்பு ஒரு வாழ்க்கையை கண்முன்னே கொண்டு நிறுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னால் விக்ரமின் ஐ திரைப்படம் கேரளாவில் வசூலை வாரிக் குவித்தது.

முதல் வாரத்திலேயே ஐ திரைப்படம் 10 கோடிகளுக்கும் அதிகமாக கேரளாவில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று நாளை வெளியாகும் 10 என்றதுக்குள்ள திரைப்படமும் பாக்ஸ் ஆபிசில் ஒரு சூறாவளியை நிகழ்த்தும் என்று திரையுலகில் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பிற்காக தன்னை வருத்திக் கொள்ளும் நடிகர்களில் ஒருவரான விக்ரம் தன்னைப் பாராட்டியதில், தற்போது நஸ்ரியா ஹேப்பி அண்ணாச்சி!

English summary
Actor Vikram Now busy with 10 endrathukulla Promotion ,in Recent Interview He Credits the performance of actress Nazriya Nazim in Ohm Shanthi Oshaana Movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil