twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரமுக்காக 3வருஷம் இல்ல..30 வருஷம் கூட வெயிட் பண்ணுவோம்..ஆனால், கோப்ரா குறித்து மக்கள் விமர்சனம்!

    |

    சென்னை : விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரையரங்கில் இன்று வெளியாகி உள்ளது.

    Recommended Video

    Cobra Movie Review | Yessa ? Bussa ? | Vikram |*Review

    தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் முதல் நாள் முதல் காட்சி காலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

    கோப்ரா படத்தை பார்த்த பொதுமக்கள் படம் குறித்து என்ன சொன்னாங்கனு பார்க்கலாமா?

    கோவமான சிங்கம்.. அருண் விஜய்யின் சினத்தை பார்க்க தயாரா.. இதோ மிரட்டலான ட்ரெயிலர்!கோவமான சிங்கம்.. அருண் விஜய்யின் சினத்தை பார்க்க தயாரா.. இதோ மிரட்டலான ட்ரெயிலர்!

    கோப்ரா

    கோப்ரா

    செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    இதுதான் கதை

    இதுதான் கதை

    கணித முறையில் வித்தியாசமாக தொடர் கொலைகளை செய்கிறார் விக்ரம். அவற்றை விசாரிக்கும் அதிகாரியாக இர்ஃபான் பதான் களமிறங்குகிறார். அப்போது அவருக்கு கொலைக்கான காரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இதில் விக்ரம் யார், அவர் ஏன் கொலை செய்கிறார் கொலைக்கான காரணம் என்பதை கோப்ரா படம் விரிவாக விளக்குகிறது.

    மிரட்டலான கெட்டப்

    மிரட்டலான கெட்டப்

    சீயான் விக்ரம் வழக்கமாக எந்த கதாபாத்திரம் எடுத்தாலும் மிரட்டுவாரு அதே போல இந்த படத்துலயும் ஏழு, எட்டு கெட்டப்பில் வரும் விக்ரம் மிரட்டி விட்டார். வேறுயாருக்காவும் இல்ல விக்ரமிற்காக இந்த படத்தை பார்க்கலாம். ஏ.ஆர்.ரஹ்மான்தான் இந்த படத்திற்கு செகண்ட் ஹீரோன என்று சொல்லும் அளவுக்கு மியூசிக் சும்மா தரமாக இருக்கு என்றனர்.

    மைனஸ்

    மைனஸ்

    படத்தோட மைனஸ் 3 மணி நேரம் படம் இருப்பது தான்,மக்களுக்கு அவ்வளவு பொருமை இல்லை., பர்ஸ்ட் ஆப் ரொம்ப சூப்பரா இருக்கு, ஜென்டில்மேட் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக எடுத்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு, ஆனால் செகண்ட் ஆப் ரொம்ப குழப்பமா இழுத்துக்கொண்டே போவது போல இருக்கு என்றனர்.

    ஹாலிவுட் லெவலுக்கு இருக்கு

    ஹாலிவுட் லெவலுக்கு படம் இருக்கு, இது இங்கிலீஸ் படம் பார்ப்பவர்களுக்குத்தான் புரியும் கமர்ஷியல் படம் பார்ப்பவர்களுக்கு புரியாது. விக்ரமுக்காக 3 வருஷம் இல்ல..30 வருஷம் கூட வெயிட் பண்ணுவோம் ஆனால், படத்தில் சென்டிமென்ட் ஒவரா இருந்தது, விக்ரம வெச்சி இன்னும் நல்ல பண்ணியிருக்கலாம், பர்ஸ்ட் ஆப்பை சூப்பரா பண்ணிட்டு, செகண்ட் ஆப்ல சென்டிமெண்ட் கொண்டு வந்தது அவ்வளவா நல்ல இல்லை இருந்தாலும் விக்ரமுக்காக பார்க்கலாம் என்றனர்.

    English summary
    Director Ajay Gnanamuthu's Cobra Public Review: கோப்ரா பொதுமக்கள் விமர்சனம்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X