அர்ஜுனை தொடர்ந்து நடிகர் விக்ரமுக்கும் கொரோனா தொற்று... வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை!

சென்னை: நடிகர் அர்ஜுனை தொடர்ந்து நடிகர் விக்ரமுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Chiyaan Vikram | Arjun Sarja, Ponniyin Selvan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். சேது, பிதாமகன், சாமி, அருள், தூள், அந்நியன், ஐ, என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார் நடிகர் விக்ரம்.

கடைசியாக கடாரம் கொண்டான்

கடைசியாக கடாரம் கொண்டான்

தான் ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரத்திற்காக எப்படிப்பட்ட ரிஸ்க்கையும் எடுக்க தயங்காதவர். கடைசியாக அவரது நடிப்பில் கடாரம் கொண்டான் படம் வெளியானது. அதனை தொடர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார் விக்ரம்.

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா மற்றும் மகான் ஆகிய படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விக்ரமுக்கு கொரோனா தொற்று

விக்ரமுக்கு கொரோனா தொற்று

இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான உடல் சோர்வு இருந்ததால் நடிகர் விக்ரம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார் நடிகர் விக்ரம். பரிசோதனை முடிவில் நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

நேற்று முன்தினம் நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் நடிகர் விக்ரமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து தமிழ் நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X