அட...விக்ரமும் மணிரத்னம் படத்திற்கு நோ சொல்லிருக்காரா?...இத்தனை நாள் இது தெரியாதே

சென்னை : தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். ஆரம்ப காலத்தில் அமராவதி, பாசப்பறவைகள் என அஜித் நடித்த படங்களில் அவருக்கு டப்பிங் பேசி வந்தவர் விக்ரம்.

பிறகு நடிகரான விக்ரமிற்கு ஆரம்ப கால படங்கள் அனைத்தும் தோல்விகளையே தந்தது. டைரக்டர் பாலா இயக்கிய சேது படம் தான் விக்ரமிற்கு முதலாவதும், பெரியதுமான வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.

பல படங்களிலும் பிஸியாக நடித்து வந்த விக்ரம் 2019 ல் கடாரம் கொண்டான், ஆதித்ய வர்மா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த பிறகு அவருடைய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. முன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு துவக்கத்தில் தான் விக்ரம் நடித்த மகான் படம் ரிலீசானது. அதுவும் ஓடிடி ரிலீஸ் தான்.

ரிலீசுக்கு தயாராகும் விக்ரம் படங்கள்

ரிலீசுக்கு தயாராகும் விக்ரம் படங்கள்

அதையே ரசிகர்கள் கொண்டாடி, அவரின் நடிப்பை பாராட்டி வந்தனர். தற்போது விக்ரம் 20 கெட்அப்களில் நடித்துள்ள கோப்ரா, ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த சமயத்தில் விக்ரமிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

கோப்ரா ஆடியோ விழாவில் விக்ரம்

கோப்ரா ஆடியோ விழாவில் விக்ரம்

மருத்துவமனையில் இருந்து விக்ரம் டிஸ்சார்ஜ் ஆகி நேற்று வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற உள்ள கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என சொல்லப்பட்டுள்ளதால் விக்ரமை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் டீசர் ரிலீசில் விக்ரம் இல்லாததை ரசிகர்கள் பெரிய குறையாக சொல்லி வந்தனர்.

மணிரத்னம் பட வாய்ப்பை மிஸ் செய்த விக்ரம்

மணிரத்னம் பட வாய்ப்பை மிஸ் செய்த விக்ரம்

ராவணன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தான் பொன்னியின் செல்வன் என அனைவருக்கும் தெரியும். ஆனால் ராவணன் படத்தை எடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சுப்பர் ஹிட் படம் ஒன்றில் நடிக்க விக்ரமிடம் தான் மணிரத்னம் முதல் முறையாக வந்து பேசினாராம். ஆனால் அப்போது விக்ரம், மணிரத்னத்திற்கு பிடிவாதமாக நோ சொல்லி விட்டாராம்.

மணிரத்திற்கே நோ சொன்னாரா

மணிரத்திற்கே நோ சொன்னாரா

அப்படி விக்ரம் நோ சொன்ன படம் எது தெரியுமா? மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி - மனிஷா கொய்ராலா நடித்த பாம்பே படம் தான். அந்த படத்திற்காக மணிரத்னத்தின் ஃபர்ஸ்ட் சாய்சாக இருந்தது விக்ரம் தானாம். அந்த சமயத்தில் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த விக்ரமிடம், பாம்பே படத்திற்காக தாடியை எடுக்க சொன்னாராம் மணிரத்னம். அவர் எவ்வளவோ சொல்லியும் விக்ரம், தாடியை எடுக்க மறுத்து விட்டாராம்.

இது தான் விக்ரம் மிஸ் செய்த படமா

இது தான் விக்ரம் மிஸ் செய்த படமா

விக்ரம் பிடிவாதமாக நோ சொன்னதால் தான் அவருக்கு பதில் அரவிந்த் சாமியை நடிக்க வைத்து அந்த படத்தை எடுத்தாராம் மணிரத்னம். பாம்பே படத்தின் போட்டோஷுட்டில் கூட விக்ரம் கலந்து கொண்டாராம். அந்த படம் சுப்பர் ஹிட் படமாகவும் அமைந்தது. பாம்பே படத்தின் சான்சை மிஸ் பண்ணியதால் தான் பல ஆண்டுகள் கழித்து ராவணன் படத்தில் நடிப்பதற்காக மணிரத்னம் கேட்டதும் உடனே ஓகே சொன்னாராம் விக்ரம்.

Recommended Video

Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood
அது தான் இதற்கு காரணமா

அது தான் இதற்கு காரணமா


ராவணன் படத்தில் விக்ரமின் நடிப்பு மணிரத்னத்தை கவர்ந்து விட்டதால், பொன்னியின் செல்வனின் வலுவான ஒரு ரோலில் விக்ரமை நடிக்க வைக்க வேண்டுமென முடிவு செய்து ஆதித்த கரிகாலன் ரோலில் விக்ரமை நடிக்க வைத்தாராம் மணிரத்னம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X